ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது நாளான நேற்று பாகிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் மோதிக்கொண்ட போட்டி ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியை தட்டையான ஆடுகளத்தில் 286 ரன்களுக்கு சிறப்பான பந்துவீச்சில் மூலம் நெதர்லாந்து அணி ஆல் அவுட் செய்து அசத்தியது. இதில் பந்துவீச்சில் பாஸ் டி லீட் 4 விக்கெட் கைப்பற்றினார்.

Advertisement

அடுத்து இலக்கை நோக்கி துரத்தும் பொழுது நெதர்லாந்து அணி 120 ரன்கள் இரண்டு விக்கெட் மட்டுமே இழந்திருந்து, பின்பு மொத்தமாக சரிந்து 81 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. நெதர்லாந்து பேட்டிங்கில் பாஸ் டி லீட் 68 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டிக்கான ஆட்டநாயகன் விருது பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசையில் ஐந்தாவதாக வந்து 52 பந்துகளில் 68 ரன்கள் அடித்த சவுத் ஷகிலுக்கு வழங்கப்பட்டது. 

Advertisement

நெதர்லாந்து அணியின் பாஸ் டி லீட் கணக்கில் எடுத்துக் கொடுக்கவில்லை. அதே சமயத்தில் இந்த உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் 10 அணிகளில் நெதர்லாந்து தவிர்க்க மற்ற ஒன்பது அணிகளும் உலகக் கோப்பைக்கு முன்பு ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் விளையாடின. ஆனால் நெதர்லாந்து அணிக்கு அப்படியான வாய்ப்புகள் ஏதும் இல்லை.

இந்த நிலையில் இது குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, “பாகிஸ்தான் வெற்றி பெற்றது. ஆனால் இது என்ன மாதிரியான வெற்றி? பெரிய ரன் வித்தியாசம் இருந்தாலும் கூட இது பெரிய வெற்றி கிடையாது. நெதர்லாந்துக்கு எதிராக பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் பாகிஸ்தான் ஆல் அவுட் ஆகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இது பெரிய அவமரியாதை இல்லைதான். 38 ரன்களுக்கு மூன்று விக்கெட் இழந்து, சமாளித்து வந்து 286 ரன்கள் எடுத்தார்கள். இது பாகிஸ்தானின் மந்தமான செயல்பாடு ஆகும்.

நீங்கள் சவுத் ஷகீல் மற்றும் ரிஸ்வான் பற்றி பேசலாம். ஆனால் உண்மையில் பாஸ் டி லீட் பற்றிதான் பேச வேண்டும். நெதர்லாந்து அணி தகுதி சுற்றிக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடவே இல்லை. ஆனால் இதையும் மீறி அவர்கள் இந்த ஆடுகளத்தில் பாகிஸ்தான் அணியை பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு ஆல் அவுட் செய்தார்கள். பாஸ் டி லீட் நான்கு விக்கெட் கைப்பற்றியதோடு பேட்டிங்கிலும் சிறப்பாக செய்தார். அவர்தான் ஆட்டநாயகனாக இருந்திருக்க வேண்டும். அவருக்கு ஐபிஎல் ஒப்பந்தம் நிச்சயமாக கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News