ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஆகியோர் தலா 44 ரன்களையும், அணியின் தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோவ் 37 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க, இறுதியில் நமந்தீர் 36 ரன்களை விளாசி அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்களைச் சேர்த்தது. பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Advertisement

இந்நிலையில் இப்போட்டியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் தொடரில் ஏபிடி வில்லியர்ஸின் 9ஆண்டுகால சாதனை முறியடித்து அசத்தியுள்ளார். அதன்படி இன்றைய போட்டியில் சூர்யகுமார் யாதவ் 15 ரன்களை கடந்ததன் மூலம் , ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக ரன்களைக் குவித்த தொடக்க வீரர் அல்லாத ஒருவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

முன்னதாக கடந்த 2016அம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய ஏபி டி வில்லியர்ஸ் 687 ரன்களைக் குவித்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்தது. இந்நிலையில் தற்சமயம் நடப்பு ஐபிஎல் தொடரில் சூர்யகுமார் யாதவ் 15 இன்னிங்ஸ்களில் விளையாடி 5 அரைசதங்கள் மற்றும் 65.18 என்ற சராசரிவுடன் 717 ரன்களைச் சேர்த்து புதிய சாதனை படைத்துள்ளார். இந்த பட்டியலில் இந்திய வீரர் ரிஷப் பந்த் கடந்த் 2018ஆம் ஆண்டு 684 ரன்களை எடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் எடுத்த தொடக்க வீரர் அல்லாத ஒருவர்

  • சூர்யகுமார் யாதவ் - 717 ரன்கள் (2025)
  • ஏபி டி வில்லியர்ஸ் - 687 ரன்கள் (2016)
  • ரிஷப் பந்த் - 684 ரன்கள் (2018)
  • கேன் வில்லியம்சன் - 622 ரன்கள் (2018)

 

Advertisement

பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் லெவன்: பிரியான்ஷ் ஆர்யா, ஜோஷ் இங்கிலிஸ், ஸ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), நேஹால் வதேரா, மார்கஸ் ஸ்டோனிஸ், ஷஷாங்க் சிங், அஸ்மதுல்லா ஓமர்சாய், கைல் ஜேமிசன், விஜய்குமார் வைஷாக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்

இம்பேக்ட் வீரர்கள்: பிரப்ஷிம்ரன் சிங், பிரவீன் தூபே, சூர்யன்ஷ் செட்ஜே, சேவியர் பார்ட்லெட், ஹர்ப்ரீத் பிரார்

மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவன்: ரோஹித் ஷர்மா, ஜானி பேர்ஸ்டோவ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), நமன் திர், மிட்செல் சான்ட்னர், ராஜ் பாவா, டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா, ரீஸ் டாப்லி

Advertisement

Also Read: LIVE Cricket Score

இம்பேக்ட் வீரர்கள்: அஷ்வனி குமார், கிருஷ்ணன் ஸ்ரீஜித், ரகு ஷர்மா, ராபின் மின்ஸ், பெவோன் ஜேக்கப்ஸ்

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News