ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தொடங்கி ரசிகர்களுக்கு விருந்தளித்தளித்து வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆர்சிபி - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஆர்சிபி அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Advertisement

மேலும் அப்போட்டியில் ஆர்சிபி அணியின் அதிரடி வீரர் டி வில்லியர்ஸ், 27 ரன்களை கடந்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் ஐந்தாயிரம் ரன்களை கடந்த ஆறாவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

Advertisement

அதிரடிக்கு துளி அளவு கூட பஞ்சம் இருக்காதா ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்கள் எப்போதும் வானவேடிக்கை காட்டுவது வழக்கம். அதனால் கிரிக்கெட் உலகின் முதல் நிலை பவுலர் பந்து வீசினாலும் பேட்ஸ்மேன்கள் பந்தை பவுண்டரிக்கு விரட்டுவர்.  

அப்படி ஐபிஎல் தொடரில் குறைந்த பந்துகளில் ஐந்தாயிரம் ரன்களை கடந்த வீரர்கள் குறித்த விவரங்களை பார்ப்போம்.
 

  1. டிவில்லியர்ஸ் - 161 இன்னிங்ஸ் - 3288 பந்துகள்.
  2. டேவிட் வார்னர் - 135 இன்னிங்ஸ் - 3554 பந்துகள்.  
  3. சுரேஷ் ரெய்னா - 173 இன்னிங்ஸ் - 3620 பந்துகள்.  
  4. ரோகித் ஷர்மா - 188 இன்னிங்ஸ் - 3817 பந்துகள். 
  5. விராட் கோலி - 157 இன்னிங்ஸ் - 3827 பந்துகள்.
  6. தவான் - 168 இன்னிங்ஸ் - 3956 பந்துகள். 

அதே போல ஐபிஎல் அரங்கில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ஏபிடி வில்லியர்ஸ் 245 சிக்ஸர்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.     

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News