உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி டாப் 2 இடத்தை பிடிக்க வேண்டும் என்றால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். இதில் குறைந்தபட்சம் ஒரு போட்டியிலாவது இந்திய அணி வெல்ல வேண்டும். ஆனால் தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை.

Advertisement

இந்த வரலாற்றை மாற்றும் முயற்சியில் பல கேப்டன்கள் சென்றாலும், அவர்களால் சாதிக்க முடியவில்லை. கடந்த முறை சென்ற விராட் கோலி படையும் ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே வென்று இருந்தது. இந்த நிலையில் இம்முறை புஜாரா ரகானே போன்ற சீனியர்கள் இல்லையென்றாலும் விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின், ஜடேஜா பும்ரா,சமி, சிராஜ் போன்ற வீரர்கள் இருக்கிறார்கள். அதே சமயம் ருதுராஜ், ஸ்ரேயாஸ், கே எல் ராகுல், கில் போன்ற இளம்படையும் இருக்கிறது.

Advertisement

இந்த இளம்படை வீரர்கள் ரன்கள் குவித்தால் மட்டுமே தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மன்னன் வீழ்த்த முடியும். அதே சமயம் இந்தியாவின் வேகப்பந்து வீச்சு படை தற்போது சிறப்பாக இருக்கிறது. ரன் குவிப்புக்கு சாதகமான இந்திய ஆடுகளங்களை பட்டையை கிளப்பினர். இதனால் தென் ஆப்பிரிக்கா ஆடுகளங்களில் இந்திய வேகப்பந்து வீச்சு சிம்ம சொப்பனமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தென் ஆப்பிரிக்க வீரர் ஏபிடி வில்லியர்ஸ்,  “இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு தலைவராக நிச்சயம் பும்ரா விளங்குவார்.
தென் ஆப்பிரிக்கா வீரர்களை நோக்கி அவர்தான் கேள்வி கேட்பார். அவர் பந்து வீசத் தொடங்கினால் அழுத்தம் கொடுப்பதை நிறுத்தவே மாட்டார். அவரிடம் அனைத்து திறமைகளும் இருக்கிறது.

கடந்த முறை இந்திய அணி வீரர்கள் தென் ஆப்பிரிக்காவில் விளையாடிய போது பும்ரா தான் தொடர்ந்து நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டு இருந்தார். பும்ரா எந்த சூழலிலும் சிறப்பாக பந்து வீசக் கூடியவர். ஸ்டெம்பை நோக்கி பந்தை கொண்டு வருவார். ஒன்று பந்து உள்ளே வரும் இல்லையென்றால் வெளியே செல்லும்.  நிச்சயம் அவர் தென் ஆப்பிரிக்கா வீரர்களை கடும் நெருக்கடிக்கு ஆளாக்குவார். இம்முறை ஒட்டுமொத்த இந்திய வேகப்பந்து வீச்சு படையும் தென் ஆப்பிரிக்காவுக்கு பெரிய ஆபத்தை கொடுக்கும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News