Afghanistan vs Australia Dream11 Prediction, T20 World Cup 2024: நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இதிலிருந்து எந்த நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் நாளை நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலிய அணியானது ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணி சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் வெற்றியையும், ஆஃப்கானிஸ்தான் அணி தோல்வியையும் தழுவியுள்ளதால் இப்போட்டி இரு அணிகளுக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.  ஏனெனில் இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றால் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை அதிகரிக்கும், அதேசமயம் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கும் என்பதாலும் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

AFG vs AUS: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ஆஃப்கானிஸ்தான் vs ஆஸ்திரேலியா
  • இடம் - அர்னோஸ் வலே மைதானம், செயின்ட் வின்செண்ட்
  • நேரம் - ஜூன் 23, காலை 6 மணி (இந்திய நேரப்படி)
Advertisement

AFG vs AUS Pitch Report

இந்த போட்டி கிங்ஸ்டவுனில் உள்ள அர்னோஸ் வெல் மைதானத்தில் நடைபெறுகிறது. இங்கு இதுவரை மொத்தம் 6  டி20 சர்வதேசப் போட்டிகள் நடந்துள்ளன. இதில் தலா மூன்று முறை பேட்டிங் மற்றும் சேஸிங் செய்த அணிகாள் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளன. மேலும் இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோரானது 118 ரன்களாவும், இங்கு அதிகபட்ச ஸ்கோர் 158 ரன்களாகவும் இருப்பதால், நிச்சயம் பந்துவீச்சாளர் ஆதிக்கம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

AFG vs AUS T20I Head to Head Record

  • மோதிய போட்டிகள் - 01
  • ஆஸ்திரேலியா - 01
  • ஆஃப்கானிஸ்தான் - 00

AFG vs AUS: Where to Watch?

Advertisement

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இத்தொடரை நேரலையில் காணலாம். 

Afghanistan vs Australia Probable Playing XI

ஆப்கானிஸ்தான் உத்தேச லெவன்: ரஹ்மானுல்லா குர்பாஸ், ஹஸ்ரதுல்லா ஸஸாய், இப்ராஹிம் சத்ரான், குல்பாதின் நைப், அஸ்மத்துல்லா ஒமர்சாய், நஜிபுல்லா ஸத்ரான், முகமது நபி, ரஷித் கான் (கேப்டன்), நூர் அஹ்மது, நவீன் உல் ஹக், ஃபசல்ஹக் ஃபரூக்கி.

Advertisement

ஆஸ்திரேலிய உத்தேச லெவன்: டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட் , பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹசில்வுட்.

AFG vs AUS T20 World Cup Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - ரஹ்மானுல்லா குர்பாஸ்
  • பேட்ஸ்மேன்கள் - டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட்
  • ஆல்-ரவுண்டர் - கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ் (கேப்டன்), அஸ்மத்துல்லா ஓமர்சாய்
  • பந்துவீச்சாளர்கள் - மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஆடம் ஸாம்பா, ரஷித் கான் (துணை கேப்டன்), ஃபசல்ஹக் ஃபரூக்கி.

AFG vs AUS Dream11 Prediction,   T20 World Cup 2024, Today Match AFG vs AUS, AFG vs AUS Dream11 Team, Fantasy Cricket Tips, AFG vs AUS Pitch Report, Today   Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between  Afghanistan vs Australia

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News