அஃப்கானிஸ்தான் அணியானது தற்சமயம் வங்கதேச அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன. இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மனிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று ஷார்ஜாவில் நடைபெற்றது.

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த்து. இப்போட்டிக்கான வங்கதேச அணியில் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ காயம் காரணமாக விளையாடாத நிலையில், மெஹிதி ஹசன் மிராஸ் கேப்டனாக செயல்பட்டார். இதையடுத்து பேட்டிங் செய்ய காளமிறங்கிய வங்கதேச அணிக்கு தன்ஸித் ஹசன் - சௌமியா சர்க்கார் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சௌமிய சர்க்கார் 24 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து தன்ஸித் ஹசன் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஸகிர் ஹசன், தாவ்ஹித் ஹிரிடோய் ஆகியோரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். 

Advertisement

இதனால் வங்கதேச அணி 72 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த மெஹிதி ஹசன் - மஹ்முதுல்லா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்தனர். அதன்பின் இருவரும் இணைந்து தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளை விளாசியதுடன் தங்களது அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். இதன் மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 145 ரன்களை எட்டியது. பின்னர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெஹிதி ஹசன் மிராஸ் 66 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 

பின்னர் களமிறங்கிய ஜக்கார் அலி, நசும் அஹ்மத் ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, இறுதிவரை களத்தில் இருந்த மஹ்முதுல்லா சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 98 ரன்களைச் சேர்த்த நிலையில் ரன் அவுட்டாகி சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்களைச் சேர்த்தது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News