Afghanistan vs Bangladesh Dream11 Prediction, T20 World Cup 2024: ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதில் குரூப் 2 பிரிவில் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், குரூப் 1இல் இருந்த எந்த இரு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதன்படி, இத்தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இருப்பினும் இன்றைய ஆட்டத்தின் முடிவைப் பொறுத்தே இரு அணிகளின் அரையிறுதிச்சுற்று வாய்ப்பானது இருக்கும் என்பதால், இவ்விரு அணிகளும் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளின் முடிவிற்காக காத்திருக்கின்றனர்.

Advertisement

AFG vs BAN: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ஆஃப்கானிஸ்தான் vs வங்கதேசம்
  • இடம் - அர்னோஸ் வாலே கிரிக்கெட் மைதானம், செயின்ட் வின்செண்ட்
  • நேரம் - ஜூன் 25, காலை 06 மணி (இந்திய நேரப்படி)
Advertisement

AFG vs BAN Pitch Report

இந்த போட்டி கிங்ஸ்டவுனில் உள்ள அர்னோஸ் வெல் மைதானத்தில் நடைபெறுகிறது. இங்கு இதுவரை மொத்தம் 8 டி20 சர்வதேசப் போட்டிகள் நடந்துள்ளன. இதில் தலா 4 முறை பேட்டிங் மற்றும் சேஸிங் செய்த அணிகாள் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளன. மேலும் இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோரானது 118 ரன்களாவும், இங்கு அதிகபட்ச ஸ்கோர் 158 ரன்களாகவும் இருப்பதால், நிச்சயம் பந்துவீச்சாளர் ஆதிக்கம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

AFG vs BAN T20I Head to Head Record

  • மோதிய போட்டிகள் - 11
  • ஆஃப்கானிஸ்தான் - 06
  • வங்கதேசம் - 05

AFG vs BAN: Where to Watch?

Advertisement

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இத்தொடரை நேரலையில் காணலாம். 

Afghanistan vs Bangladesh Probable Playing XI

ஆஃப்கானிஸ்தான் உத்தேச லெவன்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், அஸ்மத்துல்லா ஓமர்சாய், குல்பதின் நைப், முகமது நபி, ரஷித் கான் (கேப்டன்), கரீம் ஜனத், நஞ்செலியா கரோட், நூர் அகமது, நவீன் உல் ஹக், ஃபாசல்ஹக் ஃபரூக்கி.

Advertisement

வங்கதேசம் உத்தேச லெவன்: தன்ஸித் ஹசன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ (கேப்டன்), தாவ்ஹித் ஹிர்டோய், ஷகிப் அல் ஹசன், மஹ்முதுல்லா ரியாத், ஜாகர் அலி, ரிஷாத் ஹுசைன், மெஹ்தி ஹசன், தன்சீம் ஹசன் ஷாகிப், முஸ்தஃபிசூர் ரஹ்மான்.

AFG vs BAN T20 World Cup Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - ரஹ்மானுல்லா குர்பாஸ்
  • பேட்ஸ்மேன்கள் - குல்பதின் நைப், நஜ்முல் ஹுசைன் சாண்டோ, இப்ராஹிம் ஸத்ரன், தாவ்ஹித் ஹிரிடோய்
  • ஆல்-ரவுண்டர்கள் - ஷகிப் அல் ஹசன், அஸ்மத்துல்லா ஒமர்சாய், ரிஷாத் ஹுசைன் (துணை கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள் - ரஷித் கான் (கேப்டன்), நவீன் உல் ஹக், முஸ்தஃபிசூர் ரஹ்மான்

AFG vs BAN Dream11 Prediction, T20 World Cup 2024, Today Match AFG vs BAN, AFG vs BAN Dream11 Team, Fantasy Cricket Tips, AFG vs BAN Pitch Report, Today  Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between  Afghanistan vs Bangladesh

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News