ஆஃப்கானிஸ்தான் - நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி தோஹாவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச தீர்மானித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி ரஹ்மத் ஷா, ஹஸ்மதுல்ல ஷாஹிதி ஆகியோரது அபாரமான ஆட்டத்தின் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்களைச் சேர்த்தது.

Advertisement

இதில் அதிகபட்சமாக ஷாஹித் 73 ரன்களையும், ரஹ்மத் ஷா 70 ரன்களையும் சேர்த்தனர். நெதர்லாந்து தரப்பில் பிராண்டன் குளொவர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை துரத்திய நெதர்லாந்து அணியில் ஸ்காட் எட்வர்ட்ஸ் மட்டும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினார். 

அவரைத் தவிற மற்ற வீரர்கள் யாரும் சரியாக விளையாடாததால் 48 ஓவர்களிலேயே அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி, 1-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரில் முன்னிலைப் பெற்றது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News