AFG vs PAK, 1st T20I: பாகிஸ்தானை திணறடித்தது ஆஃப்கான்!

Updated: Fri, Mar 24 2023 23:11 IST
AFG vs PAK 1st T20I: Afghanistan bowlers demolish Pakistan on 92 runs! (Image Source: Google)

ஆஃப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. 

இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணி கேப்டன் ஷதாப் கான் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு சைம் அயுப் - முகமது ஹாரிஸ் இணை தொடக்கம் தந்தனர். இதில் முகமது ஹாரிஸ் 6 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த அப்துல்லா ஷஃபிக் ரன் ஏதுமின்றி விக்கெடை இழந்தார். 

இதனைத்தொடர்ந்து அதிரடியாக விளையாட முயற்சித்த சைம் அயுப் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த வீரர்களில் தஹிர் 16 ரன்களில் ஆட்டமிழக்க, ஆசாம் கான் ரன்கள் ஏதுமின்றியும், இமாத் வாசிம் 18 ரன்களிலும், கேப்டன் ஷதாப் கான் 12 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

பின்னர் வந்த வீரர்களாலும் ஆஃப்கானிஸ்தான் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து நடையைக் கட்டினர். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஃப்கானிஸ்தான் தரப்பில் முஜிப் உர் ரஹ்மான், ஃபசல்ஹாக் ஃபரூக்கி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பறினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை