வங்கதேச ஒருநாள் தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!

Updated: Tue, Oct 22 2024 22:25 IST
Image Source: Google

வங்கதேச அணி தற்சமயம் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தாக்காவில் நடைபெற்று வருகிறது. 

இதனையடுத்து வங்கதேச அணியானது ஆஃப்கானிஸ்தான் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி வங்கதேசம் - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த ஒருநாள் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. அந்தவகையில் நவம்பர் 06ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது நவம்பர் 11ஆம் தேதி முடிவடையவுள்ளது. 

இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஃப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான இந்த அணியில் ரஷித் கான், ரஹ்மனுல்லா குர்பாஸ், ரஹ்மத் ஷா, குல்பதின் நைப், முகமது நபி, ஃபசல்ஹக் ஃபரூக்கி, அஸ்மதுல்லா ஒமர்ஸாய், நூர் அஹ்மத் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர். 

அதேசமயம் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் இப்ராஹிம் ஸத்ரான் மற்றும் முஜீப் உர் ரஹ்மான் உள்ளிட்ட வீரர்களுக்கு இந்த தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தென் ஆப்பிரிக்க தொடரில் இடம்பிடிக்காமல் இருந்த நூர் அஹ்மத் அணிக்கு திரும்பியுள்ளது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. மேலும் சமீப காலங்களில் ஆஃப்கானிஸ்தான் அணி அபார் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதன் காரணமாக இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Also Read: Funding To Save Test Cricket

ஆஃப்கானிஸ்தான் அணி: ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கே), ரஹ்மத் ஷா, ரஹ்மானுல்லா குர்பாஸ், இக்ராம் அலிகில், அப்துல் மாலிக், ரியாஸ் ஹசன், செதிக்குல்லா அடல், தர்வீஷ் ரசூலி, அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, குல்பதின் நைப், ரஷித் கான், நங்யால் கரோட்டி, ஏ.எம்.கசன்ஃபர், நூர் அஹ்மத், ஃபசல் ஹக் ஃபரூக்கி, பிலால் சாமி, நவீத் ஜத்ரான், ஃபரித் அகமது மாலிக்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை