ஆஃப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இதன் முதல் டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றிபெற, இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. 

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் சைம் அயூப் , அப்துல்லா ஷஃபிக் ஆகியோர் ஃபஸல்ஹக் ஃபரூக்கியின் முதல் ஓவரிலியே விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக்கட்டினர். 

Advertisement

அதன்பின் முகமது ஹாரிஸ் 15 ரன்களையும், தயுப் தஹிர் 13 ரன்களிலும், அஸாம் கான் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த இமாத் வாசிம் - ஷதாப் கான் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் பொறுப்பாக விளையாடிய இமாத் வாசிம் அரைசதம் கடந்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 64 ரன்களையும், ஷதாப் கான் 32 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்களைச் சேர்த்தது. 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கானி 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் - இப்ராஹிம் ஸத்ரான் ஆகியோரு பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

இதில் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கட்ட ரஹ்மனுல்லா குர்பாஸ் 44 ரன்களிலும், இப்ராஹிம் ஸத்ரான் 38 ரன்களிலும் விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த நஜிபுல்லா ஸத்ரான் - முகமது நபி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 

Advertisement

இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாக்கிஸ்தானை வீழ்தியதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றவது. இதன்மூலம் பாகிஸ்தானுக்கு எதிராக தங்களது முதல் டி20 தொடரை வென்று ஆஃப்கானிஸ்தான் அணி சாதனைப்படைத்துள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News