ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டி மழையால் முழுவதுமாக கைவிடப்பட்டது. இதனைடுத்து தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - இப்ராஹிம் ஸத்ரான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் இப்ராஹிம் ஸத்ரான் 22 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து காளமிறங்கிய ரஹ்மத் ஷாவும் 4 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

Advertisement

அதேசமயம் மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்திருந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் என 51 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி - முகமது நபி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் இணைந்து 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 

இதில் ஷாஹிதி தனது அரைசதத்தைப் பதிவுசெய்ய, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முகமது நபி 48 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய இக்ரம் அலிகில் 2 ரன்களோடு பெவிலியன் திரும்ப, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி 69 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். 

அதனைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 236 ரன்களைச் சேர்த்துள்ளது.  அயர்லாந்து அணி தரப்பில் மார்க் அதிர் 3 விக்கெட்டுகளையும், பேரி மெக்கர்த்தி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. இதில் ஆண்ட்ரூ பால்பிர்னி ஒரு ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் பால் ஸ்டிர்லிங் - கர்டிஸ் காம்பேர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பால் ஸ்டிர்லிங் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

Advertisement

அதன்பின் 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பால் ஸ்டிர்லிங் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கர்டிஸ் காம்பேரும் 43 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ஹேரி டெக்டர், லோர்கன் டக்கர், ஜார்ஜ் டக்ரெல், மார்க் அதிர் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்காளில் விக்கெட்டுகளை இழந்தனர்.  பின்னர் களமிறங்கிய வீரர்களாலும் ஆஃப்கானிஸ்தான் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.

இதனால் அயர்லாந்து அணி 35 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஃப்கானிஸ்தான் தரப்பில் முகமது நபி 5 விக்கெட்டுகளையும், நங்யால் கரோட்டி 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 117 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தினர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News