Afghanistan vs India Dream11 Prediction, T20 World Cup 2024: அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் இன்று முதல் தொடங்கவுள்ள நிலையில், இதிலிருந்து எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் இத்தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணியை எதிர்த்து, ஆஃப்கானிஸ்தான் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளிலும் அதிரடியான வீரர்கள் நிறைந்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பும் ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. 

Advertisement

AFG vs IND: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ஆஃப்கானிஸ்தான் vs இந்தியா
  • இடம் - கென்ஸிங்டன் ஓவல், பார்படாஸ்
  • நேரம் - ஜூன் 20, இரவு 8 மணி (இந்திய நேரப்படி)
Advertisement

AFG vs IND Pitch Report

பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இதுவரை மொத்தம் 46 டி20 போட்டிகள் நடந்துள்ளன. அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 29 போட்டிகளில், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 14 முறையும் வெற்றிபெற்றுள்ளன. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோரானது 138 ரன்களாக இருந்தாலும், இந்த மைதானத்தில் பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 224 ரன்கள் உள்ளது. இதனால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு உதவலாம். 

AFG vs IND T20I Head to Head Record

  • மோதிய போட்டிகள் - 08
  • இந்தியா - 07
  • ஆஃப்கானிஸ்தான் - 00
  • முடிவில்லை - 01

AFG vs IND: Where to Watch?

Advertisement

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இத்தொடரை நேரலையில் காணலாம். 

Afghanistan vs India Probable Playing XI

ஆப்கானிஸ்தான் உத்தேச லெவன்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், குல்பாதின் நைப், அஸ்மத்துல்லா ஒமர்சாய், நஜிபுல்லா ஸத்ரான், முகமது நபி, கரீம் ஜனத், ரஷித் கான் (கேப்டன்), நூர் அகமது, நவீன் உல் ஹக், ஃபசல்ஹாக் ஃபரூக்கி.

Advertisement

 இந்தியா உத்தேச லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

AFG vs IND T20 World Cup Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - ரிஷப் பந்த், ரஹ்மானுல்லா குர்பாஸ் (துணைக்கேப்டன்)
  • பேட்ஸ்மேன்கள் - ரோஹித் சர்மா, விராட் கோலி, 
  • ஆல்ரவுண்டர் - ஹர்திக் பாண்டியா (கேப்டன்), அஸ்மத்துல்லா ஒமர்சாய், முகமது நபி
  • பந்துவீச்சாளர்கள் - ஜஸ்பிரித் பும்ரா, ரஷித் கான், அர்ஷ்தீப் சிங், ஃபசல்ஹக் ஃபரூக்கி.

AFG vs IND Dream11 Prediction, T20 World Cup 2024, Today Match AFG vs IND, AFG vs IND Dream11 Team, Fantasy Cricket Tips, AFG vs IND Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Afghanistan vs India

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News