இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்தது.

Advertisement

இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் டேரில் மிட்செல் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோர் அரைசதம் கடந்து அசத்தினர். இதில் டேரில் மிட்செல் 63 ரன்களையும், மைக்கேல் பிரேஸ்வெ ல் 53 ரன்களையும் சேர்க்க, ரச்சின் ரவீந்திரா 37 ரன்களையும், கிளென் பிலீப்ஸ் 34 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் ரன்காளைச் சேர்க்க தவறினர். இதனால் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்களைச் சேர்த்தது.

Advertisement

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 76 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 48 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்த நிலையில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த கேஎல் ராகுல் 34 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதன்மூலம் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியதுடன், மூன்றாவது முறையாக ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.

இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய ரோஹித் சர்மா, “இப்போட்டியில் வெற்றிபெற்றது மிகவும் நன்றாக இருக்கிறது. இந்த தொடர் முழுவதும் நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம். எங்கள் வழியில் வெற்றி பெறுவது ஒரு சிறந்த உணர்வு. ஆக்ரோஷமாக விளையாடுவது எனக்கு இயல்பானதல்ல, ஆனால் நான் உண்மையில் செய்ய விரும்பிய ஒன்று. நீங்கள் வித்தியாசமாக ஏதாவது செய்யும்போது, ​​உங்களுக்கு அணி மற்றும் நிர்வாகத்தின் ஆதரவு இருக்க வேண்டும்.

நான் முன்பு ராகுல் டிராவிட்டிடமும், இப்போது கௌதம் கம்பீருடனும் பேசினேன். இது நான் உண்மையில் செய்ய விரும்பிய ஒன்று. நான் இத்தனை வருடங்களாக வித்தியாசமான பாணியில் விளையாடியுள்ளேன், இப்போது இதன் மூலம் பலன்களைப் பெறுகிறோம். நாம் மேற்பரப்புகளின் தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டும், முதல் ஐந்து-ஆறு ஓவர்களை எப்படிச் செயல்படுத்த விரும்பினேன் என்பது எனக்கு மிகவும் தெளிவாகத் தெரிந்தது.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

நானும் முன்பே அவுட் ஆகிவிட்டேன், ஆனால் செயல்படுத்தல் முக்கியமானது. ஆனால் அணியில் பேட்டிங்கின் ஆழம் அதிகம் என்பதால் எங்களால் சுதந்திரமாக விளையாட அது உதவுகிறது. ஏனெனில் ஜடேஜா போன்ற வீரர் உங்களின் எட்டாம் வரிசையில் களமிறங்கும் போது, முன்னாள் உள்ள வீரர்களுக்கு அது நம்பிக்கை தருகிறது. இங்கேவந்து எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News