மகளிர் டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!

Updated: Fri, Jan 06 2023 18:04 IST
Alice Capsey Named In England's 15-member Squad For Women's T20 World Cup (Image Source: Google)

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரானது அடுத்த மாதம் 10ஆம் தேதி முதல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கு ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, அயர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தகுதி பெற்றுள்ளன.

இந்த 10 அணிகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு குரூப் சுற்றில் மோத உள்ளன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு குருப்பிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். 

இதில் குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், நியூசிலாந்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா அணிகளும், குரூப் பி பிரிவில் இங்கிலாந்து, இந்தியா, அயர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்த டி20 உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹீதர் நைட் தலைமையிலான இந்த அணியில் சோபி எக்ஸ்லெஸ்டோன், ஏமி ஜோன்ஸ், நாட் ஸ்கைவர், லாரன் வின்பீல்ட் ஹிட், டேனியல் வையட் என நட்சத்திர வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளனர். 

இங்கிலாந்து மகளீர் அணி: ஹீதர் நைட் (கேப்டன்), லாரன் பெல், மியா பொச்சியர், கேத்ரின் பிரண்ட், ஆலிஸ் கேப்சி, கேட் கிராஸ், ஃப்ரேயா டேவிஸ், சார்லி டீன், சோபியா டாங்க்லி, சோபி எக்ஸ்லெஸ்டோன், சாரா க்ளென், எமி ஜோன்ஸ், நாட் ஸ்சிவர், லாரன் விண்ட்பீல்ட்-ஹில், டேனி வியாட்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை