தென் இந்திய கிரிக்கெட்டின் தந்தை என போற்றப்படுபவர் புஜ்ஜிபாபு. அவரின் நினைவாக கடந்த 1907ஆம் ஆண்டு முதல் புஜ்ஜிபாபு கிரிக்கெட் கோப்பை தொடரானது கடந்த 2017ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்டு வந்தது. அதன்பின் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் இத்தொடர் மோற்கொண்டு நடத்தாமல் கைவிடப்பட்ட நிலையில், பல்வேறு முன்னாள் வீரர்களின் கோரிக்கை ஏற்று கடந்த ஆண்டு மீண்டும் இத்தொடரானது நடைபெற்றது. இந்நிலையில் இத்தொடரின் அடுத்த சீசனானது தற்போது தொடங்கவுள்ளது.

Advertisement

அதிலும் ரஞ்சி கோப்பை தொடரை பின்பற்றி நடத்தப்படும் இத்தொடரின் மூலம் வீரர்கள் தங்கள் உள்ளூர் தொடர்களுக்கு தயராகவும் இத்தொடர் வழிவகை செய்வதாக பார்க்கப்படுகிறது. அந்தவகையில் தற்சமயம் 12 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் போட்டி அட்டவணையை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது செப்டம்பர் 11ஆம் தேதியுடன் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அந்தவகையில் இத்தொடரின் முதல் சுற்றானது ஆக்ஸர் 15 முதல் 18ஆம் தேதி வரையிலும், இரண்டாவது சுற்று ஆக்ஸட் 21 முதல் 24ஆம் தேதி வரையிலும், மூன்றாவது சுற்று ஆகஸ்ட் 27 முதல் 30ஆம் தேதி வரையிலும், அரையிறுதி போட்டிகள் செப்டம்பர் 2 முதல் 5 வரையிலும், இறுதிப்போட்டியானது செப்டம்பர் 8ஆம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்கொண்டு இத்தொடரில் பங்கேற்கும் அணிகளூம் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் குரூப் ஏவில் மத்திய பிரதேஷ், ஜார்கண்ட், ஹைதரபாதா அணிகளும், குரூப் பி பிரிவில் ரயில்வேஸ், குஜராத், தமிழ்நாடு பிரசிடென்ட் லெவன் அணிகளும், குரூப் சி பிரிவில் மும்பை, ஹரியானா, டிஎன்சிஏ பிரசிடென்ட் லெவன் அணிகளும், குரூப் டி பிரிவில் ஜம்மு காஷ்மிர், பரோடா மற்றும் சத்தீஷ்கர் ஆகிய அணிகலும் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

புஜ்ஜி பாபு தொடர் அட்டவணை

ஆகஸ்ட் 15-18 - முதல் சுற்று

  • குரூப் ஏ – மத்தியப் பிரதேசம் vs ஜார்கண்ட், திருநெல்வேலி
  • குரூப் பி - ரயில்வே vs குஜராத், சேலம்
  • குரூப் சி – மும்பை vs ஹரியானா, கோயம்புத்தூர்
  • குரூப் டி - ஜம்மு & காஷ்மீர் vs சத்தீஸ்கர், நத்தம்
Advertisement

ஆகஸ்ட் 21-24 - இரண்டாம் சுற்று 

  • குரூப் ஏ – ஜார்கண்ட் vs ஹைதராபாத் – திருநெல்வேலி
  • குரூப் பி- ரயில்வே vs டிஎன்சிஏ பிரசிடென்ட்ஸ் லெவன் - சேலம்
  • குரூப் சி – ஹரியானா vs டிஎன்சிரா லெவன் – கோயம்புத்தூர்
  • குரூப் டி– ஜம்மு & காஷ்மீர் vs பரோடா – நத்தம்

ஆகஸ்ட் 27-30 - மூன்றாம் சுற்று

  • குரூப் ஏ - மத்தியப் பிரதேசம் vs ஹைதராபாத் - திருநெல்வேலி
  • குரூப் பி - குஜராத் vs டிஎன்சிஏ பிரசிடென்ட்ஸ் லெவன் - சேலம்
  • குரூப் சி - டிஎன்சிஏ லெவன் vs மும்பை - கோயம்புத்தூர்
  • குரூப் டி - பரோடா vs சத்தீஸ்கர் - நத்தம்

அரையிறுதி - செப்டம்பர் 2-5

  • முதல் அரையிறுதி: குரூப் ஏ டேபிள் டாப்பர் vs குரூப் பி டேபிள் டாப்பர் - திருநெல்வேலி
  • இரண்டாவது அரையிறுதி: குரூப் சி டேபிள் டாப்பர் vs குரூப் டி டேபிள் டாப்பர் - நத்தம்
Advertisement

இறுதிப்போட்டி - செப்டம்பர் 08-11

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News