Advertisement

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், உலக கிரிக்கெட் அணிகள் தங்களது அடுத்தடுத்த கிரிக்கெட் தொடர்களுக்கு தயாராகி வருகின்றன. அந்தவகையில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது இம்மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி ஜூலை 10ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது ஜூலை 30ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

Advertisement

இத்தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியும் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரிய இன்று அறிவித்துள்ளது. இத்தொடரின் முதல் போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த ஜேம்ஸ் ஆண்டர்சனிற்கு முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மட்டும் இடம் வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வை அறிவித்துள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன், எஞ்சியிருக்கு போட்டிகளில் இங்கிலாந்து அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை இங்கிலாந்து அணியின் நிர்வாக இயக்குனர் ராப் கீ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய ராப் கீப், “லார்ட்ஸ் டெஸ்ட் போட்டிக்கு பிறகு, ஜேம்ஸ் ஆண்டர்சன் எங்கள் அமைப்பில் தொடர்வார். மேலும் அவர் ஒரு வழிகாட்டியாக எங்களுக்கு உதவுவார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக அவர் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளர். அதனால் அவர் அணியிலிருந்து வெளியேறுவதை நாங்கள் விரும்பவில்லை. மேலும் அணியின் ஆலோசகராக செயல்படுவது குறித்து அவரிடம் கேட்டபோது, அவர் அதற்கு ஆர்வமாக இருந்தார். மேலும் அவருக்கு இங்கிலாந்து கிரிக்கெட்டில் நிறைய வாய்ப்புகள் உள்ளனர். ஒருவேளை அவர் இங்கிலாந்து அணியுடனேயே இருக்க விரும்பினால் அது இங்கிலாந்து கிரிக்கெட்டின் மிகப்பெரும் அதிர்ஷ்டமாகும்” என்று தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்து அணிக்காக கடந்த 2003ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஜேம்ஸ் ஆண்டர்சன், இதுவரை 187 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 700 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இதில் 32 ஐந்து விக்கெட் ஹாலும் அடங்கும். அதுமட்டுமின்றி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வேகப்பந்து வீச்சாளர் எனும் வரலாற்று சாதனையையும் ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

இங்கிலாந்து டெஸ்ட் அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், கஸ் அட்கின்சன், ஷோயப் பஷீர், ஹாரி புரூக், ஸாக் கிரௌலி, பென் டக்கெட், டான் லாரன்ஸ், தில்லன் பென்னிங்டன், ஒல்லி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News