இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்களைக் குவித்தது. 

Advertisement

அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் சுனில் நரைன் 7 பவுண்டரி, 7 சிக்சர்களை விளாசி 85 ரன்களையும், அறிமுக வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 54 ரன்களையும், ஆண்ட்ரே ரஸல் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 41 ரன்களையும் சேர்த்து உதவினர். இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராகவும் இது பதிவானது. 

Advertisement

இப்போட்டியில் டேல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் பந்துவீசிய ஆன்ட்ரிச் நோர்ட்ஜே 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி விளையாடிவரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தற்போதுவரை 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் இஷாந்த் சர்மா வீசிய யார்க்கர் குறித்த காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

அதன்படி இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் கடைசி ஓவரை இஷாந்த் சர்மா வீசினார். கேகேஆர் அணி தரப்பில் அதனை ஆண்ட்ரே ரஸல் எதிர்கொண்டார். அந்த ஓவரில் முதல் பந்தை இஷாந்த் சர்மா யார்க்கராக வீச, அதனை சற்று எதிர்பாராத ஆண்ட்ரே ரஸல் நிலை தடுமாறி கீழே விழுந்ததுடன், அந்த பந்தில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இக்காணொளி தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News