சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் அர்ஷ்தீப் சிங்!
இங்கிலாந்து அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி முதலிரண்டு போட்டிகளிலும், இங்கிலாந்து அணி மூனறாவது போட்டியிலும் வெற்றிபெற்று 2-1 என்ற கணக்கில் தொடரில் நீடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது டி20 போட்டி நாளை (ஜனவரி 31) புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால் தொடரை கைப்பற்றும். அதேசமயம் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றால் தொடரை சமன்செய்யும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன்.
இதனையடுத்து இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியின் மூலம் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் சில சாதனைகளை தன் பெயரில் சேர்க்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். முன்னதாக தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் விளையாடிய அவருக்கு மூன்றாவது போட்டியில் ஓய்வளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
100 டி20 சர்வதேச விக்கெட்டுகள்
இந்நிலையில் இப்போட்டியில் அர்ஷ்தீப் சிங் விளையாடி மேற்கொண்டு 2 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 100 விக்கெட்டுகளை பூர்த்தி செய்வார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் எனும் சாதனையை படைக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. இதுவரை இந்திய அணிக்காக 62 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அர்ஷ்தீப் சிங் 98 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கொண்டு இந்தப் போட்டியில் அர்ஷ்தீப் சிங் 100 விக்கெட்டுகளை வீழ்த்தினால், சர்வதேச டி20 போட்டியில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் எனும் சாதனையையும் படைப்பார். முன்னதாக இந்த சாதனையை பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவூஃப் படைத்துள்ளார். அவர்71 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள நிலையில், அதனை முறியடிக்கும் வாய்ப்பை அர்ஷ்தீப் சிங் பெற்றுள்ளார்.
சர்வதேச டி20 போட்டிகளில் வேகமாக 100 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்
- ரஷீத் கான் - 53 போட்டிகள்
- சந்தீப் லாமிச்சானே - 54 போட்டிகள்
- வனிந்து ஹசரங்கா - 63 போட்டிகள்
- ஹாரிஸ் ரவூஃப் - 71 போட்டிகள்
- எஹ்சான் கான் - 71 போட்டிகள்
பவர்பிளேயில் அதிக விக்கெட்டுகள்
இதுதவிர்த்து பவர்பிளே ஓவர்களில் அர்ஷ்தீப் சிங் மேற்கொண்டு ஒரு விக்கெட் எடுத்தால், சர்வதேச டி20 போட்டிகளில் முதல் 6 ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் ஷாஹீன் அஃப்ரிடியை முந்தும் வாய்ப்பை பெற்றுள்ளார். தற்போது இருவரும் சர்வதேச டி20 போட்டிகளின் முதல் 6 ஓவர்களில் தலா 43 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளனது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
இந்திய அணி: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங் (4&5 போட்டிக்கு மட்டும்), அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, முகமது ஷமி, ஷிவம் தூபே, ரமந்தீப் சிங்.