உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடர் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. ஐபிஎல் தொடர் முடிவடைந்த சில வாரங்களில் டி20 உலகக்கோப்பை தொடங்கவுள்ளது. இதனால் டி20 உலகக்கோப்பைக்கு தயாராகுவதற்கு இந்திய அணிக்கு சில தொடர்கள் மட்டுமே உள்ளது.

Advertisement

கடந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணி அனுபவ வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டி20 கிரிக்கெட் தொடர்களுக்கு ஒருமுறை கூட சேர்க்கப்படவில்லை. இதனால் இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டு வந்தார். ஆனால் உலகக்கோப்பை தொடரின் போது அவர் காயமடைந்ததால், தற்போது சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

Advertisement

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கும் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். டி20 உலகக்கோப்பை தொடருக்கு இந்திய அணியை கட்டமைக்க சில மாதங்களே உள்ள நிலையில், டி20 அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா காயத்தில் சிக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர் எப்போதும் குணமடைவார் என்பது இதுவரை தெரியவில்லை.

இதனிடையே ஹர்திக் பாண்டியே நேரடியாக ஐபிஎல் தொடரில் தான் விளையாடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேசிய இந்திய முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா, “ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஃபிட்டாக இருந்தால் எந்த சந்தேகமும் அவர்கள் இருவரிம் பேட்டிங்கில் இருக்க தேவையில்லை.

நிச்சயம் அவர்கள் இருவருமே அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நடக்கும் டி20 உலகக்கோப்பையில் விளையாட வேண்டும். ஒருவேளை ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடருக்கு தான் திரும்புவார் என்று உறுதியானால், நிச்சயம் தேர்வு குழுவினருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். அவர் எப்போதும் இந்திய அணிக்கு திரும்புவார் என்று பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News