ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் இந்த ஆண்டு டி20 வடிவில் நடக்கவுள்ளது. ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை இலங்கையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பம் காரணமாக தொடரை வேறு இடத்தில் நடத்தப்படலாம் என்று சொல்லப்பட்டது. தற்போது தொடர் நடைபெறும் இடம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

அதன்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பைத் தொடரை நடத்துவது என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. நேற்று நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் விரிவான ஆலோசனைக்குப் பிறகு இலங்கையில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தொடரை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றுவது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இலங்கையில் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அதேபோல் தற்போது பாகிஸ்தான் அணியும் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. 

ஆசிய கோப்பை தொடரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இலங்கை கிரிக்கெட் வாரியம், எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து தொடரை வழிநடத்தும் என கூறப்பட்டுள்ளது. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் இந்த முடிவுக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்துள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News