ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 147 ரன்னில் அவுட் ஆனது. 

Advertisement

இதனையடுத்து களமிறங்கியது இந்திய அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ஹர்த்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டார்.

Advertisement

இந்நிலையில் விராட் கோலியின் பேட்டிங் குறித்து இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவுதம் கம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர்,“ரோஹித் சர்மாவின் விக்கெட் விழுந்தவுடன் அடுத்த ஓவரிலேயே அவுட் ஆனதால் கோலி மிகவும் ஏமாற்றமடைந்திருப்பார். ஏனென்றால் ரோஹித் அவுட் ஆனவுடன் அப்படி ஒரு ஷாட்டை கோலி ஆடியிருக்க தேவையில்லை. 

ஒரு நல்ல இளம் வீரர் கூட அந்த ஷாட்டை ஆடியிருக்கமாட்டார். அப்படி இளம் வீரர் ஒருவர் அந்த மாதிரியான ஷாட்டை விளையாடியிருந்தால் நிறைய விமர்சனத்திற்கு உள்ளாகியிருப்பார். சர்வதேச கிரிக்கெட்டில் அவர் அடித்த ரன்களின் எண்ணிக்கை எனக்குத் தெரியும், இந்த ஷாட்டைப் பார்க்கும்போது அந்த ஷாட் தேவையில்லை என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்வார். 

நீங்கள் 34 பந்துகளில் விளையாடி 35 ரன்கள் எடுத்தீர்கள். உங்கள் கேப்டன் இப்போதுதான் அவுட் ஆனார். உங்கள் இன்னிங்ஸை இன்னும் கொஞ்சம் விஷயங்கள் எளிதாகி இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News