ஐசிசி மாதாந்திர விருதுகள்: பரிந்துரை பட்டியலில் ஷாஹீன், டக்கர், அத்தபத்து!

Updated: Fri, Jun 07 2024 20:46 IST
ஐசிசி மாதாந்திர விருதுகள்: பரிந்துரை பட்டியலில் ஷாஹீன், டக்கர், அத்தபத்து! (Image Source: Google)

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனைகளைத் தேர்வுசெய்து விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. இது ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் இரண்டுக்கும் தனித்தனியே வழங்கப்படுகிறது. இந்நிலையில் மே மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. 

அதன்படி, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களில் சிறப்பாக பந்துவீசிய பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அஃப்ரிடி இரண்டாவது முறையாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். அவரைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் தொடர் நாயகன் விருதை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் குடகேஷ் மோட்டி மற்றும் பாகிஸ்தான் மற்றும் முத்தரப்பு டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட அயர்லாந்து வீரர் லோர்கன் டக்கர் ஆகியோரது பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல் மே மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இலங்கை அணி கேப்டன் சமாரி அத்தபட்டு, ஸ்காட்லாந்தின் கேத்ரின் பிரைஸ், இங்கிலாந்தின் சோஃபி எக்லெஸ்டோன் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். அதன்படி ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளில் அபாரமாக விளையாடிய சமாரி அத்தபத்து சதமடித்து அசத்தியதுடன், பந்துவீச்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 

இதே தொடரில் ஸ்காட்லாந்து அணிக்காக அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய கேத்ரின் பிரைஸ் அந்த அணி டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதிபெறவும் முக்கிய காரணமாக திகழ்ந்தார். அதிலும் தகுதிச்சுற்று போட்டியில் பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டதன் காரணமாக அவரது பெயர் இந்த பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்துள்ளர்.

அதேசமயம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து வீராங்கனை சோஃபி எக்லெஸ்டோன், டி20 தொடரில் 5 விக்கெட்டுகளையும், ஒருநாள் தொடரில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் வாக்கெடுப்பின் அடிப்படையில் மே மாதத்தின் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கவுரவிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை