Australia vs India 1st Test Dream11 Prediction: இந்திய அணி சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுவதுமாக இழந்து ஒயிட்வாஷ் ஆனது. இதனால் இந்திய அணியின் மீதும், அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ஷுப்மன் கில் ஆகியோர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள்ன. இந்நிலையில் தற்போது அஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகளை கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது.

Advertisement

அதன்படி ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது வரும் நவம்பர் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது நாளை மறுநாள் பெர்த்தில் உள்ள ஆப்டஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவெ இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்த கையோடு இத்தொடரை எதிர்கொள்கிறது. அதேசமயம் கடந்த் இரண்டு முறை நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை இழந்த கையோடு ஆஸ்திரேலிய அணி இந்தியாவை எதிர்கொள்கிறது. இதனால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. 

Advertisement

AUS vs IND 1st Test: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs இந்தியா
  • இடம் - ஆப்டஸ் கிரிக்கெட் மைதானம், பெர்த்
  • நேரம் - நவம்பர் 22, காலை 7.30 மணி (இந்திய நேரப்படி)

AUS vs IND 1st Test: Pitch Report

ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான  இந்த டெஸ்ட் போட்டியானது பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த மைதானத்தில் இதுவரை 4 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில், அந்த நான்கு போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணிகளே வெற்றியைப் பதிவுசெய்துள்ளனர். இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரானது 456 ரன்களாக உள்ள நிலையில், நான்காவது இன்னிங்ஸ் ஸ்கோர் 183 ரன்களாக மட்டுமே உள்ளது. மேலும் இங்கு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிகளவு பவுன்ஸ் கிடைக்கும் என்பதால் நிச்சயம் பேட்டர்களுக்கு சாவாலான போட்டிக்காக இது இருக்கும். இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதாலில் பேட்டிங்கித் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

AUS vs IND 1st Test: Where to Watch?

Advertisement

தென் ஆப்பிரிக்கா - இந்தியா டி20 தொடரை இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் டிஸ்னி பிளர் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரலையில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

AUS vs IND 1st Test: Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 107
  • ஆஸ்திரேலியா  - 45
  • இந்தியா - 32
  • முடிவில்லை - 29

Australia vs India 1st Test Probable Playing XI

Advertisement

ஆஸ்திரேலியா உத்தேச லெவன்: உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, மிட்செல் மார்ஷ், நாதன் லையன், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட்

இந்திய அணியின் உத்தேச லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல்/அபிமன்யூ ஈஸ்வரன், தேவ்தத் படிக்கல்/ஷுப்மான் கில், விராட் கோலி, ரிஷப் பந்த், துருவ் ஜூரல்/சர்ஃப்ராஸ் கான், நிதிஷ் குமார் ரெட்டி, ரவிச்சந்திரன் அஸ்வின், ஆகாஷ் சிங், ஹர்ஷித் ராணா, ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்).

AUS vs IND 1st Test: Dream11 Team

Advertisement

விக்கெட் கீப்பர் - ரிஷப் பந்த், அலெக்ஸ் கேரி
பேட்ஸ்மேன்கள் - விராட் கோலி (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஸ்டீவ் ஸ்மித், உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட்
ஆல்-ரவுண்டர் - நிதீஷ் குமர் ரெட்டி
பந்துவீச்சாளர்கள் - ஜஸ்பிரித் பும்ரா, மிட்செல் ஸ்டார்க் (துணைக்கேப்டன்), ஜோஷ் ஹேசில்வுட்

AUS vs IND 1st Test Dream11 Prediction, AUS vs IND Dream11 Prediction, Today Match AUS vs IND, AUS vs IND Test Series, AUS vs IND Dream11 Team, Fantasy Cricket Tips, AUS vs IND Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Australia vs India

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News