Australia vs India Dream11 Prediction, T20 World Cup 2024: ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று ஆட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியானது அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், மீதமுள்ள மூன்று இடங்களை எந்த அணிகள் பிடிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் நாளை நடைபெறும் சூப்பர் 8 சுற்றின் முக்கியமான ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஆஸ்திரேலிய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற இந்த வெற்றியானது மிகவும் முக்கியமானது. அதேசமயம் இந்த போட்டியில் கணிசமான ரன்களில் இந்திய அணி தோல்வியைத் தழுவினால் அது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதாலும் இப்போட்டியின் வெற்றியானது இரு அணிகளுக்கும் தேவை என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

Advertisement

AUS vs IND: போட்டி தகவல்கள்

Advertisement

மோதும் அணிகள் - இந்தியா vs ஆஸ்திரேலியா

இடம் - டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானம், செயின்ட் லூசியா

நேரம் - ஜூன் 24, இரவு 8 மணி (இந்திய நேரப்படி)

AUS vs IND Pitch Report

Advertisement

செயின்ட் லூசியாவில் உள்ள மைதானம் பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இங்குள்ள பவுண்டரி எல்லைகள் சிறியது என்பதால் இங்கு பேட்டர்கள் தங்களது ஷாட்களை விளையாட முடியும். அதேசமயம் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சாளர்களும் நல்ல வேகம் மற்றும் ஸ்விங் ஆகிவை கிடைக்கும் என்பதால், புதிய பந்தில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மேலும் சுழற்பந்து வீச்சாளர்களும் இங்கு தங்கள் திறனை வெளிப்படுத்தலாம்.

AUS vs IND T20I Head to Head Record

  • மோதிய போட்டிகள் - 31
  • இந்தியா - 19
  • ஆஸ்திரேலியா - 11
  • முடிவில்லை - 01

AUS vs IND: Where to Watch?

Advertisement

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இத்தொடரை நேரலையில் காணலாம். 

Australia vs India Probable Playing XI

ஆஸ்திரேலிய உத்தேச லெவன்: டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

Advertisement

இந்தியாவின் உத்தேச லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா..

AUS vs IND T20 World Cup Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - ரிஷப் பந்த்
  • பேட்ஸ்மேன்கள் - விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், டிராவிஸ் ஹெட்
  • ஆல்ரவுண்டர் - கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ் (துணை கேப்டன்), ஹர்திக் பாண்டியா (கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள் - பாட் கம்மின்ஸ், ஆடம் ஜம்பா, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ்.

AUS vs IND Dream11 Prediction, T20 World Cup 2024, Today Match AUS vs IND, AUS vs IND Dream11 Team, Fantasy   Cricket Tips, AUS vs IND Pitch Report, Today  Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between  Australia vs India

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News