Advertisement

Australia vs Oman Dream11 Prediction Match 10, ICC T20 World Cup 2024: ஐசிசி நடத்தும் 9ஆவது ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 10ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து ஓமன் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் இவ்விரு அணிகளும் மோதும் முதல் போட்டி இதுவாகும். மேலும் ஆஸ்திரேலிய அணியானது அடுத்தடுத்த ஐசிசி தொடர்களில் சாம்பியன் பட்டத்தை வென்ற கையோடு இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளதால் அந்த அணியின் மீதான கூடுதல் எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தில் உள்ளது. மேலும் நடப்பு உலகக்கோப்பை தொடரில் ஓமன் அணி விளையாடிய முதல் போட்டியில் தோல்வியைத் தழுவினாலும், இறுதிவரை போரடிய காரணத்தால் நிச்சயம் அந்த அணியும் எளிதில் தோல்வியை ஏற்காமல் போராடும் என்பதால் இப்போட்டியில் நிச்சயம் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

AUS vs OMN: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs ஓமன்
  • இடம் - கெனிங்ஸ்டன் ஓவல், பார்படாஸ்
  • நேரம் - காலை 6 மணி (இந்திய நேரப்படி)

AUS vs OMN: Pitch Report

Advertisement

பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இதுவரை மொத்தம் 42 டி20 போட்டிகள் நடந்துள்ளன. அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 28 போட்டிகளில், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 13 முறையும் வெற்றிபெற்றுள்ளன. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோரானது 138 ரன்களாக இருந்தாலும், இந்த மைதானத்தில் பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 224 ரன்கள் உள்ளது. இதனால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு உதவலாம். 

AUS vs OMN: Head-to-Head

  • மோதிய போட்டிகள் - 00
  • ஆஸ்திரேலியா - 00
  • ஓமன் - 00
  • முடிவில்லை - 00

AUS vs OMN: Live Streaming Details

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இத்தொடரை நேரலையில் காணலாம். 

Australia vs Oman Predicted Teams

ஆஸ்திரேலியா: டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் (கே), கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

ஓமன்: காஷ்யப் பிரஜாபதி, நசீம் குஷி, அகிப் இலியாஸ் (கே), ஜீஷன் மக்சூத், அயான் கான், காலித் கைல், முகமது நதீம், மெஹ்ரான் கான், ஷகீல் அகமது, கலீமுல்லா, பிலால் கான்.

AUS vs OMN Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள்: ஜோஷ் இங்கிலிஸ்
  • பேட்டர்ஸ்: டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் (துணை கேப்டன்), டிராவிஸ் ஹெட் (கேப்டன்), காஷ்யப் பிரஜாபதி
  • ஆல்-ரவுண்டர்கள்: கிளென் மேக்ஸ்வெல், மெஹ்ரான் கான், ஜீஷன் மக்சூத், அகிப் இலியாஸ்
  • பந்துவீச்சாளர்கள்: மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹேசில்வுட்
Advertisement

Australia vs Oman Fantasy Tips, AUS vs OMN: Dream11 Team, Australia vs Oman: Predicted XIs, AUS vs OMN: Pitch Report, AUS vs OMN Live Streaming Details, AUS vs OMN: Head-to-Head, AUS vs OMN: Dream11 Prediction match 10 ICC T20 World Cup 2024

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News