பாகிஸ்தான் அணியானது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணியானது 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.  

Advertisement

இதையடுத்து ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரானது இன்று தொடங்கியது. அந்தவகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியானது நாளை பிரிஸ்பேனில் உள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக இப்போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 7 ஓவர்களை கொண்ட போட்டியாக இது தொடங்கியது. அந்தவகையில் இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் முகமது ரிஸ்வான் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். 

Advertisement

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் மற்றும் மேத்யூ ஷார்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் முதல் ஓவரிலேயே பவுண்டரியும், சிக்ஸரையும் பதிவுசெய்து அதிரடியாக தொடங்கினர். இதில் 9 ரன்களை எடுத்த கையோடு ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் தனது விக்கெடை இழந்தர். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசித்தளினார். அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடும் முயற்சியில் 7 ரன்களை எடுத்திருந்த மேத்யூ ஷார்ட் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

அதேசமயம் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த கிளென் மேக்ஸ்வெல் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 19 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 43 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து டிம் டேவிட்டும் 10 ரன்களில் நடையைக் கட்டினார். இறுதியில் மார்கஸ் ஸ்டொய்னிஸ் தனது பங்கிற்கு 21 ரன்களைச் சேர்க்க, நிர்ணயிக்கப்பட்ட 7 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 93 ரன்களைச் சேர்த்தது. பாகிஸ்தான் தரப்பில் அப்பாஸ் அஃப்ரிடி 2 விக்கெட்டுகளையும், நசீம் ஷா, ஹாரிஸ் ராவுஃப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News