பாகிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடரில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி டேவிட் வார்னரின் அபாரமான சதத்தின் மூலமும், மிட்செல் மார்ஷின் அதிரடியான ஆட்டத்தின் மூலமாகவும் முதல் இன்னிங்ஸில் 487 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 164 ரன்களையும், மிட்செல் மார்ஷ் 90 ரன்களையும் எடுத்தனர். பாகிஸ்தான நி தரப்பில் அமர் ஜமால் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Advertisement

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் அப்துல்லா ஷபீக் மற்றும் இமாம்-உல்-ஹக் ஓரளவு நல்ல தொடக்கம் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் அடித்த நிலையில் அப்துல்லா ஷபீக் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ஷான் மசூத் தனது பங்குக்கு 30 ரன்கள் அடித்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் இரண்டாவது நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 53 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்கள் அடித்தது.

இதையடுத்து நேற்று தொடங்கிய 3ஆம் நாள் ஆட்டத்தில் அரைசதம் கடந்திருந்த இமாம் உல் ஹக் 62 ரன்களில் விக்கெட்டை இழக்க, ஷஷாதும் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த பாபர் ஆசாம் 21, சௌத் சகீல் 28, சர்ஃப்ராஸ் அஹ்மத் 3 என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் மூன்றாம் நாள் தேநீர் இடைவேளைக்கு முன்னதாகவே பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 271 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் லையன் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க், கேப்டன் பாட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து 216 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 3ஆவது நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்களை எடுத்திருந்தது. அதன்பின் இன்று தொடங்கிய நான்காள் நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் 45 ரன்களிலும், டிராவிஸ் ஹெட் 14 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.

இருப்பினும் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த்ய உஸ்மான் கவாஜா அரைசதம் கடந்த நிலையில், அவருடன் இணைந்த மிட்செல் மார்ஷ் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். இதில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கவாஜா 90 ரன்களில் ஆட்டமிழக்க, மறுப்பக்கம் 2 சிக்சர், 7 பவுண்டரிகளுடன் மிட்செல் மார்ஷ் 63 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி 233 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்து, பாகிஸ்தான் அணிக்கு 450 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. 

Advertisement

இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் அப்துல்லா ஷஃபிக் 2 ரன்களிலும், இமாம் உல் ஹக் 10 ரன்களுக்கும் என மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய கேப்டன் ஷான் மசூத் 2 ரன்களுக்கும், நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் 14 ரன்களிலும், சௌத் சகீல் 24 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர்.

பின்னர் களமிறங்கிய சர்ஃப்ராஸ் அஹ்மத், ஆகா சல்மான், ஃபஹீம் அஷ்ரஃப், அமர் ஜமால், ஷஷாத் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 89 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹசில்வுட் தலா 3 விக்கெட்டுகளையும், நாதன் லையன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்துள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது டிசம்பர் 26ஆம் தேதி பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக மெல்போர்னில் நடைபெறவுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News