இந்திய ஏ அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்மற்ற டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் முதால் போட்டியில் ஆஸ்திரேலிய ஏ அணி வெற்றிபெற்று அசத்திய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டியானது நேற்று மெல்போர்னில் தொடங்கியது. 

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய ஏ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியில் அபிமன்யூ ஈஸ்வரன், சாய் சுதர்ஷன் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல் 4 ரன்களிலும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 4 ரன்னிலும், தேவ்தத் படிக்கல் 26 ரன்னிலும், நிதீஷ் ரெட்டி 16 ரன்னிலும், தனுஷ் கோட்டியான், கலீல் அஹ்மத் என அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். 

Advertisement

இருப்பினும் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய துருவ் ஜூரெல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் இப்போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட துருவ் ஜூரெல் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 80 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறியதால் இந்திய ஏ அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161  ரன்களுக்கே ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய ஏ அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மைக்கேல் நேசர் 4 விக்கெட்டுகளையும், பியூ வெப்ஸ்டர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய ஏ அணியில் மெக்ஸ்வீனி 14 ரன்களிலும், கேமரூன் பான்கிராஃப்ட் 3 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய ஏ அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 53 ரன்களைச் சேர்த்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் மார்கஸ் ஹாரிஸ் 26 ரன்களுடனும், சாம் கொண்டாஸ் ஒரு ரன்னுடனும் தொடர்ந்தனர். இதில் சாம் கொண்டாஸ் 3 ரன்னில் நடையைக் கட்ட, அடுத்து வந்த ஒலிவியர் டேவிஸ், வெப்ஸ்டர் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். 

அதேசமயம் மறுப்பக்கம் பொறுப்புடன் விளையாடி வந்த மார்கஸ் ஹாரிஸ் அரைசதம் கடந்த நிலையில் 74 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தர். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ரோக்கிசியோலி 35 ரன்களையும், பெர்சன் 30 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய ஏ அணி முதல் இன்னிங்ஸில் 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் பிரஷித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளையும், முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்மூலம் ஆஸ்திரேலிய ஏ அணி முதல் இன்னிங்ஸில் 62 ரன்கள் முன்னிலைப் பெற்றது. 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இதனைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய ஏ அணியில் அபிமன்யூ ஈஸ்வர்ன் 17 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சாய் சுதர்ஷன் 3 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 11 ரன்னிலும், கேஎல் ராகுல் 10 ரன்னிலும், தேவ்தத் படிக்கல் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்த நிலையில், இந்திய ஏ அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 73 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் துருவ் ஜூரெல் 19 ரன்களுடனும், நிதீஷ் ரெட்டி 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News