Australia vs South Africa: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரிலும் விளையாடும் ஆஸ்திரேலிய அணியில் இருந்து சீன் அபோட், ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், தன்வீர் சங்கா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும்,  5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி, அதன்பின் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்து அசத்தியுள்ளது.

Advertisement

இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி அடுத்த மாதம் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் ஆகஸ்ட் 10ஆம் தேதியும், ஒரு நாள் தொடரானது ஆகஸ்ட் 19ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான தென் ஆப்பிரிக்க டி20 மற்றும் ஒருநாள் அணிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அயின் கேப்டனாக ஐடன் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், காகிசோ ரபாடா, ரியன் ரிக்கெல்டன் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோரும் அணிக்கு திரும்பியுள்ளனர். மேற்கொண்டு முத்தரப்பு தொடரில் சிறப்பாக செயல்பட்ட டெவால்ட் பிரீவிஸ், லுவான் ட்ரே  பிரிட்டோரியஸ் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் டேவிட் மில்லர், ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, ஜெரால்ட் கோட்ஸி உள்ளிட்வர்களுக்கு இடம்கிடைக்கவில்லை. 

இந்நிலையில் இத்தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருநாள் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதன் காரணமாக மிட்செல் மார்ஷ் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் டிராவிஸ் ஹெட் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். 

இதுதவிர்த்து மிட்செல் ஓவன் மற்றும் மேத்யூ குஹ்னமேன் ஆகியோர் ஒருநாள் அணியில் அறிமுக வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் மேத்யூ ஷார்ட் மற்றும் நாதன் எல்லிஸ் ஆகியோரும் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர். அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம்பிடித்திருந்த சீன் அபோட், ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், தன்வீர் சங்கா, கூப்பர் கோனொலி மற்றும் ஆரோன் ஹார்டி உள்ளிட்டோருக்கு இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

Advertisement

ஆஸ்திரேலிய டி20 அணி: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அபோட், டிம் டேவிட், பென் துவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மேத்யூ குஹ்னேமன், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஓவன், மேத்யூ ஷார்ட், ஆடம் ஸாம்பா

ஆஸ்திரேலியா ஒருநாள் அணி: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், அலெக்ஸ் கேரி, பென் துவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லாபுஷாக்னே, லான்ஸ் மோரிஸ், மிட்செல் ஓவன், மேத்யூ ஷார்ட், ஆடம் ஜாம்பா

தென் ஆப்பிரிக்க டி20 அணி: ஐடன் மார்க்ராம் (கேப்டன்), கார்பின் போஷ், டெவால்ட் ப்ரீவிஸ், நாந்த்ரே பர்கர், ஜார்ஜ் லிண்டே, குவேனா மபாகா, செனுரன் முத்துசாமி, லுங்கி இங்கிடி, நகாபா பீட்டர், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், ககிசோ ரபாடா, ரியான் ரிக்கெல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், பிரெனலன் சுப்ராயென், ரஸ்ஸி வான் டெர் டுசென்

Advertisement

தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணி: டெம்பா பவுமா (கேப்டன்), கார்பின் போஷ், மேத்யூ ப்ரீட்ஸ்கே, டெவால்ட் ப்ரீவிஸ், நந்த்ரே பர்கர், டோனி டி ஜோர்ஜி, ஐடன் மார்க்ராம், செனுரன் முத்துசாமி, கேசவ் மகாராஜ், வியான் முல்டர், லுங்கி என்கிடி, லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், பிரெனலன் சுப்ராயென்

Also Read: LIVE Cricket Score

ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்க தொடர் அட்டவணை

  • முதல் டி20 - ஆகஸ்ட் 10, டார்வின்
  • இரண்டாவது டி20 - ஆகஸ்ட் 12, டார்வின்
  • மூன்றாவது டி20 - ஆகஸ்ட் 16, கெய்ர்ன்ஸ்
  • முதல் ஒருநாள் போட்டி - ஆகஸ்ட் 19, கெய்ர்ன்ஸ்
  • இரண்டாவது ஒருநாள் போட்டி - ஆகஸ்ட் 22, மெக்கே
  • மூன்றாவது ஒருநாள் போட்டி - ஆகஸ்ட் 24, மெக்கே

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News