AUS vs PAK, 2nd Test: 12 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணி அறிவிப்பு; ரிஸ்வானுக்கு வாய்ப்பு!

Updated: Mon, Dec 25 2023 13:20 IST
Image Source: Google

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெற உள்ளது. மெல்போர்னில் நடைபெறும் இப்போட்டி பாக்ஸிங் டே டெஸ்ட் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இப்போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். 

இந்நிலையில் இப்போட்டியில் விளையாடு ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அதே அணியே இப்போட்டியிலும் விளையாடுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியும் 12 பேர் கொண்ட அணியை இன்று அறிவித்துள்ளது. 

இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இடம் பெற்றிருந்த சர்ஃப்ராஸ் அகமது நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக முகமது ரிஸ்வான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் காயம் காரணமாக விலகியுள்ள குர்ரம் ஷஸாத் மற்றும் நௌமன் அலி ஆகியோருக்கு பதிலாக ஹசன் அலி, மிர் ஹம்சா, அமீர் ஜமால், சஜித் கான் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். 

பாகிஸ்தான் அணி - இமாம்-உல்-ஹக், அப்துல்லா ஷபீக், ஷான் மசூத் (கேப்டன்), பாபர் ஆசம், சவுத் ஷகீல், முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சல்மான் அலி ஆகா, ஷாஹீன் அப்ரிடி , ஹசன் அலி, மிர் ஹம்சா, அமீர் ஜமால் மற்றும் சஜித் கான்.

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்ச் மார்ஷ், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (கே), நாதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை