AUS vs IND, 1st ODICricket Tips: இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நாளை முதல் தொடங்கவுள்ளது. 

Advertisement

அந்தவகையில், ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஷுப்மன் கில் தலைமையில் இந்திய அணி முதல் முறையாக ஒருநாள் தொடரை எதிர்கொள்ள இருக்கிறது. மேலும் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரும் கம்பேக் கொடுக்கவுள்ளதால், இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

Advertisement

AUS vs IND: Match Details

மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs இந்தியா
இடம் - பெர்த் கிரிக்கெட் மைதானம், பெர்த்
நேரம் - காலை 9 மணி

AUS vs IND: Live Streaming Details

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இந்த தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் வழியாக தொலைக்காட்சியில் பார்க்க முடியும். கூடுதலாக, இந்த போட்டிகளை  ஜியோஹாட்ஸ்டாரிலும் கண்டு மகிழலாம்.

AUS vs IND: Head-to-Head in ODIs

  • Total Matches: 152
  • Australia: 84
  • India: 58
  • No Result: 10

AUS vs IND: Ground Pitch Report

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 6 சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் 1 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அணியும், 5 போட்டிகளில் ரன்களை சேஸிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. இது தவிர, இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 172 ரன்கள் ஆகும், அதே நேரத்தில் இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 259 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது

Advertisement

AUS vs IND: Possible XIs

Australia: டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் (கேப்டன்), மேத்யூ ஷார்ட், மார்னஸ் லபுஷாக்னே, ஜோஷ் பிலிப், மிட்செல் ஓவன், கூப்பர் கோனோலி, மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ்

India: ரோஹித் சர்மா, ஷுப்மான் கில் (கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல்ராகுல், அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி, குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்

AUS vs IND: Players to Watch out for

Advertisement

Probable Best Batter

இந்தியாவைப் பொறுத்தவரை, ஷுப்மான் கில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவதுடன், ரன்களையும் குவித்து வருகிறார். கேப்டன் பதவியில் தனது முதல் ஆட்டத்தை சிறப்பாக மாற்ற அவர் முயற்சிப்பார். ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை, மிட்செல் மார்ஷ் அற்புதமான ஃபார்மில் உள்ளார்.

Probable Best Bowler

Advertisement

இந்திய அணி மிடில் ஓவர்களில் குல்தீப் யாதவை அதிகம் சார்ந்துள்ளது. ஆஸ்திரேலியா அணியில் ஜோஷ் ஹேசில்வுட் முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Today Match Prediction: முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெறும் என்று நாங்கள் கணித்துள்ளோம்.

Also Read: LIVE Cricket Score

AUS vs IND Match 1st ODI, Today Match AUS vs IND, AUS vs IND Prediction, AUS vs IND Predicted XIs, Injury Update of the match between Australia vs India

Advertisement

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News