AUS vs IND, 1st T20ICricket Tips: இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

Advertisement

இதையடுத்து, ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரானது நாளை முதல் தொடங்கவுள்ளது. இதில் கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியானது நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரை வென்ற உத்வேகத்துடன் இந்த போட்டியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் ஒருநாள் தொடருக்கான பதிலடியை இந்த போட்டியில் கொடுக்கும் முனைப்பில் இந்திய அணி விளையாடவுள்ளது. இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertisement

AUS vs IND: Match Details

மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs இந்தியா
இடம் - மனுகா ஓவல் கிரிக்கெட் மைதானம், கான்பெர்ரா
நேரம் - மதியம் 1.45 மணி

AUS vs IND: Live Streaming Details

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இந்த தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் வழியாக தொலைக்காட்சியில் பார்க்க முடியும். கூடுதலாக, இந்த போட்டிகளை ஜியோஹாட்ஸ்டாரிலும் கண்டு மகிழலாம்.

AUS vs IND: Head-to-Head in T20Is

  • Total Matches: 32
  • Australia: 09
  • India: 20
  • No Result: 01

AUS vs IND: Ground Pitch Report

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 22 சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் 10 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அணியும், 9போட்டிகளில் ரன்களை சேஸிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. இது தவிர, இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 150 ரன்கள் ஆகும், அதே நேரத்தில் இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 195 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது

AUS vs IND: Possible XIs

Advertisement

Australia: மிட்செல் மார்ஷ் ©, ஜோஷ் இங்கிலிஸ், டிராவிஸ் ஹெட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மிட்செல் ஓவன், மேத்யூ ஷார்ட், டிம் டேவிட், சேவியர் பார்ட்லெட், பென் துவார்ஷுயிஸ், மேத்யூ குன்னேமன், ஜோஷ் ஹேசில்வுட்

India: ஷுப்மான் கில், அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் ©, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, திலக் வர்மா, அக்ஸர் படேல், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ்

AUS vs IND: Players to Watch out for

Probable Best Batter

Advertisement

ஆஸ்திரேலியா அணிக்காக மிட்செல் மார்ஷ் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். இந்தியாவைப் பொறுத்தவரை, அனைவரின் கவனமும் அபிஷேக் சர்மா மீது உள்ளது.

Probable Best Bowler

ஜஸ்பிரித் பும்ரா இந்தியாவின் முக்கிய பந்து வீச்சாளராக உள்ளார். ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை, ஜோஷ் ஹேசில்வுட் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 

Advertisement

Today Match Prediction: ஆஸ்திரேலியாவை காட்டிலும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், இந்த போட்டியில் இந்திய் அணி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளது. 

Also Read: LIVE Cricket Score

AUS vs IND Match 1st T20I, Today Match AUS vs IND, AUS vs IND Prediction, AUS vs IND Predicted XIs, Injury Update of the match between Australia vs India

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News