AUS vs IND, 5th T20ICricket Tips: இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுவரை நான்கு டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், இந்திய அணி இரண்டு போட்டிகளிலும், ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.

Advertisement

இதையடுத்து, ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கு ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை பிரிஸ்பேனில் உள்ள த கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இந்திய அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளதால், இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்ல முயற்சிக்கும். மறுபக்கம் தொடரை சமன் செய்யும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.

Advertisement

AUS vs IND: Match Details

மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs இந்தியா
இடம் - காபா கிரிக்கெட் மைதானம், பிரிஸ்பேன்
நேரம் - மதியம் 1.45 மணி

AUS vs IND: Live Streaming Details

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இந்த தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் வழியாக தொலைக்காட்சியில் பார்க்க முடியும். கூடுதலாக, இந்த போட்டிகளை ஜியோஹாட்ஸ்டாரிலும் கண்டு மகிழலாம்.

AUS vs IND: Head-to-Head in T20Is

  • Total Matches: 36
  • Australia: 12
  • India: 22
  • No Result: 02

AUS vs IND: Ground Pitch Report

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 11 சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் 8 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அணியும், 3 போட்டிகளில் ரன்களை சேஸிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. இது தவிர, இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 159 ரன்கள் ஆகும், அதே நேரத்தில் இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 209  ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது

AUS vs IND: Possible XIs

Advertisement

Australia: மேத்யூ ஷார்ட், மிட்செல் மார்ஷ் (கேப்டன்), ஜோஷ் இங்கிலிஸ், டிம் டேவிட், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஓவன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், சேவியர் பார்ட்லெட், பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், மேத்யூ குஹ்னெமன்.

India: அபிஷேக் சர்மா, ஷுப்மான் கில், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா, ஷிவம் துபே, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி.

AUS vs IND: Players to Watch out for

இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் நட்சத்திர வீரர்களாக இருக்கலாம், அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவுக்காக மிட்செல் மார்ஷ் மற்றும் நாதன் எல்லிஸ் ஆகியோர் பிரகாசிக்க முடியும்

Advertisement

Today Match Prediction: ஆஸ்திரேலியா அணியைக் காட்டிலும் இந்திய அணி சிறப்பாக செயல்படவுள்ளதால் இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது

Also Read: LIVE Cricket Score

AUS vs IND Match 5th T20I, Today Match AUS vs IND, AUS vs IND Prediction, AUS vs IND Predicted XIs, Injury Update of the match between Australia vs India

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News