AUS-W vs ENG-W, Match 23, Cricket Tips: இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 

Advertisement

இந்நிலையில் நாளை நடைபெறும் 23ஆவது லீக் ஆட்டத்தில் அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து, நாட் ஸ்கைவர் பிரண்ட் தலைமையிலான இங்கிலாந்து மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி இந்தூரில் உள்ள உள்ள ஹோல்கார் கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் இரு அணிகளும் ஏற்கெனவே அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

AUS-W vs ENG-W: Match Details

மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா மகளிர் vs இங்கிலாந்து மகளிர்
இடம் - ஹோல்கார் கிரிக்கெட் மைதானம், இந்தூர்
நேரம்- அக்டோபர் 22, மதியம் 3.0 மணி (இந்திய நேரப்படி)

AUS-W vs ENG-W: Live Streaming Details

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் 2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் வழியாக தொலைக்காட்சியில் பார்க்க முடியும். கூடுதலாக, இந்த போட்டிகளை  ஜியோஹாட்ஸ்டாரிலும் கண்டு மகிழலாம்.

AUS-W vs ENG-W: Head-to-Head in ODIs

  • Total Matches: 89
  • Australia Women: 61
  • England Women: 24
  • No Result/Tied: 4

AUS-W vs ENG-W: Ground Pitch Report

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி இந்தூரில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 10 சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் 7 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும், 3 போட்டிகளில் ரன்களை சேஸிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. இது தவிர, இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்319 ரன்கள் ஆகும், அதே நேரத்தில் இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 418 ரன்கள் குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

AUS-W vs ENG-W: Possible XIs

Australia Women: பெத் மூனி (கேப்டன்), ஜார்ஜியா வால், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், எல்லிஸ் பெர்ரி, ஆஷ்லே கார்ட்னர், அனபெல் சதர்லேண்ட், தஹ்லியா மெக்ராத், ஜார்ஜியா வேர்ஹாம், அலானா கிங், மேகன் ஸ்கட், டார்சி பிரவுன்

England Women:ஏமி ஜோன்ஸ், ஹீதர் நைட், டாமி பியூமண்ட், நாட் ஸ்கைவர்-பிரண்ட் (கேப்டன்), சோபியா டங்க்லி, ஆலிஸ் கேப்ஸி, எம்மா லாம்ப், சோஃபி எக்லெஸ்டோன், சார்லோட் டீன், லின்சி ஸ்மித், லாரன் பெல்

Today Match Prediction: இங்கிலாந்தை காட்டிலும் ஆஸ்திரேலிய அணி வலிமை வாய்ந்ததாக பார்க்கப்படுவதால், இந்த ஆட்டத்தில் அந்த அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: LIVE Cricket Score

AUS-W vs ENG-W Prediction Match 23, ICC Womens World Cup 2025, Today Match AUS-W vs ENG-W, AUS-W vs ENG-W Prediction, AUS-W vs ENG-W Predicted XIs, Injury Update of the match between Australia Women vs England Women

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News