இந்திய மகளிர் அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று (டிசம்பர் 5) பிரிஸ்பேனில் உள்ள ஆலன் பார்டர் கிரிக்கெட் மைதாந்த்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு பிரிய புனியா மற்றும் ஸ்மிருதி மந்தனா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிரியா புனியா 3 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 8 ரன்னில் ஸ்மிருதி மந்தனாவும் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் இந்திய அணி 19 ரன்னில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் - ஹர்லீன் தியோல் விக்கெட் இழப்பை தடுக்கும் முயற்சியில் இறங்கினர். 

Advertisement

இதில் ஹர்லீன் தியோல் 19 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அதற்கடுத்து 17 ரன்களை எடுத்த நிலையில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் நிதானமாக விளையாடி வந்த நிலையில் 24 ரன்களில் அவரும் விக்கெட்டை இழக்க, அவருடன் இணைந்து விளையாடி வந்த ரிச்சா கோஷும் 14 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தீப்தி சர்மா ஒரு ரன்னிலும், சைமாஅ தாக்கூர் 4 ரன்னிலும், டைடச் சாது 2 ரன்னிலும், பிரியா மிஷ்ரா ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் இந்திய மகளிர் அணி 34.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 100 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மேகன் ஷாட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்: ஃபோப் லிட்ச்ஃபீல்ட், ஜார்ஜியா வோல், எல்லிஸ் பெர்ரி, பெத் மூனி, அனாபெல் சதர்லேண்ட், ஆஷ்லே கார்ட்னர், தஹ்லியா மெக்ராத் (கேப்டன்), ஜார்ஜியா வேர்ஹாம், அலனா கிங், கிம் கார்த், மேகன் ஷட்.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இந்தியா பிளேயிங் லெவன்: பிரியா புனியா, ஸ்மிருதி மந்தனா, ஹர்லீன் தியோல், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், தீப்தி ஷர்மா, டைட்டாஸ் சாது, பிரியா மிஸ்ரா, சைமா தாகூர், ரேணுகா தாக்கூர் சிங்

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News