ஐசிசி ஒருநாள் அணி 2022: ஸ்ரேயஸ் ஐயர், முகமது சிராஜுக்கு இடம்!

Updated: Tue, Jan 24 2023 15:14 IST
Babar Azam Named Captain Of ICC's ODI Team Of The Year, Two Indians Included (Image Source: Google)

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஆண்டுதோறும் சர்வதேச அளவில் சிறந்த வீரர்களை தேர்வு செய்து ஒரு அணியை உருவாக்கும். அந்தவகையில் 2022ஆம் ஆண்டுக்கான ஒருநாள் அணியை அறிவித்துள்ளது. 2023 ஒருநாள் உலகக் கோப்பை இந்த வருடம் நடைபெறவுள்ள நிலையில் 2022ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐசிசி-ன் இந்த ப்ளேயிங் 11இல் இந்தியாவில் இருந்து 2 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி இந்திய அணியிலிருந்து ஸ்ரேயாஸ் ஐயர், முகமது சிராஜ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். 

அதேசமயம் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இந்த அணியில் இடம்பிடிக்கவில்லை. மேலும் இந்த அணியின் கேப்டனாக பாகிஸ்தானின் பாபர் ஆசாம் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். அதேபோல் ஜிம்பாப்வே அணியைச் சேர்ந்த சிக்கந்தர் ரஸாவும் இந்த அணியில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி ஒருநாள் அணி 2022: பாபர் அசாம் (கே), டிராவிஸ் ஹெட், ஷாய் ஹோப், ஸ்ரேயாஸ் ஐயர், டாம் லாதம், சிக்கந்தர் ராஸா, மெஹிதி ஹசன் மிராஸ், அல்ஜாரி ஜோசப், முகமது சிராஜ், டிரென்ட் போல்ட், ஆடம் ஜம்பா.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை