தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சாதனை படைக்க காத்திருக்கும் பாபர் ஆசாம்!
முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. மொத்தம் 4 போட்டிகள் கொண்ட இத்தொடரில் முதலிரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் மூன்றாவது போட்டியானது நாளை (பிப்ரவரி 12) தொடங்கவுள்ளது. லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இதில் இரு அணிகளும் இத்தொடரில் விளையாடிய முதல் போட்டியில் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளன. இதனால் இப்போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்போட்டியின் மூலம் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் 6000 ரன்கள்
இந்தப் போட்டியில் பாபர் ஆசாம் 33 ரன்கள் எடுத்தால், ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 6000 ரன்கள் எடுத்தவர் என்ற உலக சாதனையைப் படைப்பார். அவர் 124 ஒருநாள் போட்டிகளில் 121 இன்னிங்ஸ்களில் விளையாடி 56.73 என்ற சராசரியில் 5967 ரன்களை எடுத்துள்ளார். தற்போது, ஒருநாள் போட்டிகளில் வேகமாக 6000 ரன்களை எடுத்த சாதனை ஹாஷிம் அம்லாவின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது, அவர் 123 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை எட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானுக்காக அதிக சதங்கள்
இது தவிர, இத்தொடரில் பாபர் ஆசாம் ஒரு சதம் அடித்தால், பாகிஸ்தானுக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த முதல் வீரர் எனும் சாதனைப் படைப்பார். தற்போதுவரை அந்த அணியின் முன்னாள் வீரர் சயீத் அன்வர் 244 இன்னிங்ஸ்களீல் 20 ஒருநாள் சதங்களை அடித்ததே இதுநாள் வரை சாதனையாக உள்ளார். அதேசமயம் பாபர் ஆசாம் 121 இன்னிங்ஸில் 19 சதங்களை அடித்து அந்த ப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
விராட் கோலியை வீழ்த்த வாய்ப்பு
மேற்கொண்டு அவர் சதமடிப்பதில் வெற்றி கண்டால், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகாமாக 20 சதங்களை அடித்த வீரர் எனும் விராட் கோலியின் சாதனை முறியடிக்கவுள்ளார். முன்னதாக விராட் கோலி 133 இன்னிங்ஸ்களில் 20 சதங்களை பூர்த்தி செய்ததே சாதனையாக இருக்கும் நிலையில், அதனை முறியடிக்கும் வாய்ப்பை பாபர் ஆசாமிற்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
பாகிஸ்தான் அணி: முகமது ரிஸ்வான் (கேப்டன்), பாபர் ஆசாம், ஃபகார் ஸமான், கம்ரான் குலாம், சவுத் ஷகீல், தையாப் தாஹிர், ஃபஹீம் அஷ்ரஃப், குஷ்தில் ஷா, சல்மான் அலி ஆகா, உஸ்மான் கான், அப்ரார் அகமது, ஹாரிஸ் ரவூஃப், முகமது ஹஸ்னைன், நசீம் ஷா, ஷாஹீன் ஷா அப்ரிடி.