ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடிப்பாரா பாபர் ஆசாம்?

Updated: Sat, Dec 14 2024 19:48 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்சமயம் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இரண்டு போட்டியிலும் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்று அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.

இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (டிசம்பர் 14) ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெறவுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க அணியானது ஏற்கெனவே தொடரை வென்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்வதால், இதிலும் வெற்றிபெற்று பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பியில் இப்போட்டியை எதிர்கொள்கிறது.

அதேசமயம் பாகிஸ்தான் அணி இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேடுவதுடன், ஒயிட்வாஷையும் தவிர்க்கும் முயற்சியில் களமிறங்கவுள்ளது. இதனால் இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேற்கொண்டு இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர்.

இந்நிலையில் இப்போட்டியின் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனையைப் படைக்கும் வாய்ப்பை பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசாம் பெற்றுள்ளார். அதன்படி இந்தப் போட்டியில் பாபர் ஆசாம் மேற்கொண்டு 09 ரன்களை எடுக்கும் பட்சத்தில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பார். பாபர் ஆசாம் இதுவரை 128 போட்டிகளில் விளையாடி 4, 223 ரன்கள் எடுத்துள்ளார்.

தற்போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் எனும் சாதனையானது இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா பெயரில் உள்ளது. ரோஹித் சர்மா இதுவரு 159 டி20 போட்டிகளில் விளையாடி 4,231 ரன்களுடன் முதலிடத்தில் நீடித்தி வருகிறார். அவருக்கு அடுத்த இடத்தில் 4,223 ரன்களுடன் பாபர் ஆசாம் இரண்டாம் இடத்திலும், 4188 ரன்களுடன் விராட் கோலி மூன்றாம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

இதுதவிர்த்து இப்போட்டியில் பாபர் ஆசாம் மேற்கொண்டு 4 சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த பாகிஸ்தான் வீரர்கள் பட்டியலில், ஷாகித் அஃப்ரிடி (73), முகமது ஹபீஸ் (76) மற்றும் ஃபகர் ஸமான் (76) ஆகியோரை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தைப் பிடிப்பார். தற்சமயம் இந்த பட்டியலில் பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் 95 சிக்ஸர்களை விளாசி முதலிடத்தில் உள்ள நிலையில், பாபர் ஆசாம் 73 சிக்ஸர்களுடன் 5ஆம் இடத்தில் உள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை