வங்கதேச அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 03ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.  இதில் முதலாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 21 முதல் 25ஆம் தேதிவரை ராவல்பிண்டியில் உள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

Advertisement

அதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 03ஆம் தேதி வரையில் கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பாகிஸ்தான் சென்றுள்ள வங்கதேச அணி பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

Advertisement

14 ஆயிரம் ரன்கள்

இந்நிலையில் இத்தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. அதன்படி இந்த டெஸ்ட் தொடரில் பாபர் ஆசாம் 228 ரன்கள் எடுத்தால் சர்வதேச கிரிக்கெட்டில் 14,000 ரன்களை எட்டுவார். இதன்மூலம், இன்ஸாமாம் உல் ஹக், யூனிஸ் கான், முகமது யூசுப் மற்றும் ஜாவேத் மியாந்தத் ஆகியோரிருடன் இந்த சாதனையை படைக்கும் 5ஆவது வீராக பாபர் ஆசாம் இருப்பார். 

பாகிஸ்தான் அணிக்காக 2015ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான பாபர் ஆசாம் இதுநாள் வரை 292 போட்டிகளில் விளையாடி 324 இன்னிங்ஸ்களில் 13,772 ரன்களைச் சேர்த்துள்ளார். இதில் 31 சதங்களும், 94 அரைசதங்களையும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

டெஸ்ட் கிரிக்கெட்டில் 4000 ரன்கள்

Advertisement

மேற்கொண்டு இந்தொடரில் பாபர் ஆசாம் 102 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் 4,000 ரன்களையும் அவர் கடக்கவுள்ளார். இத்தொடரில் அவர் இதனைக் கடக்கும் பட்சத்தில் பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்களை கடந்த 12ஆவது வீரர் எனும் பெருமையை பெறுவார். இதுவரை. 52 டெஸ்ட் போட்டிகளில் 94 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர் 45.85 சராசரியுடன் 3,898 ரன்கள் எடுத்துள்ளார்.

கோலி-கவாஸ்கரின் சிக்ஸர் சாதனை

அதுமட்டுமில்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் பாபர் இதுவரை 23 சிக்சர்களை அடித்துள்ளார். இந்த தொடரில் அவர் மேற்கொண்டு நான்கு சிக்ஸர்களை அடித்தால், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய ஜாம்பவான்கள் விராட் கோலி, சுனில் கவாஸ்கர் ஆகியோரை பின்னுக்கு தள்ளுவார். இதுவரை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோர் தலா 26 சிக்சர்களை அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

வங்கதேச டெஸ்ட் அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), மஹ்முதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன், ஷத்மான் இஸ்லாம், மொமினுல் ஹக், முஷ்பிக்கூர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் குமார் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், நஹித் ராணா, ஷோரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத், தஸ்கின் அகமது, சையத் காலித் அகமது.

பாகிஸ்தான் அணி: ஷான் மசூத் (கே), சவுத் ஷகீல், அமீர் ஜமால் (உடற்தகுதிக்கு உட்பட்டு), அப்துல்லா ஷபீக், அப்ரார் அகமது, பாபர் ஆசாம், காம்ரன் குலாம், குர்ரம் ஷாஜாத், மிர் ஹம்சா, முகமது அலி, முகமது ஹுரைரா, முகமது ரிஸ்வான், நசீம் ஷா, சைம் அயூப், சல்மான் அலி ஆகா, சர்ஃபராஸ் அகமது, ஷாஹீன் அஃப்ரிடி

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News