ஐசிசி ஆடவர் டி20 பேட்டர்களுக்கான தரவரிசையில் 1000 நாட்களுக்கு மேல் முதலிடத்தை தக்கவைத்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் புதிய டி20 சாதனையை படைத்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி டி20 தரவரிசையில் 1,013 நாட்கள் நம்பர் 1 பேட்டராக இருந்த நெடுநாள் சாதனையை பாபர் ஆசம் முறியடித்துள்ளார்.

Advertisement

தற்போது தரவரிசையில் பாபர் அசாம் 818 ரேட்டிங் புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்திலும், பாகிஸ்தான் விக்கெட் கீப்பர்-பேட்டர் முகமது ரிஸ்வான் 794 ரேட்டிங் புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும் உள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி 20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு பாகிஸ்தானை எட்டியதில் பாபர் ஆசம் முக்கிய பங்கு வகித்ததார். கடந்த ஆண்டு ஆட்டத்தின் 29 டி20 போட்டிகளில் விளையாடிய பாபர் ஆசம் 939 ரன்கள் குவித்திருந்தார்.

Advertisement

இதற்கிடையில், விராட் கோலி இந்த ஆண்டு 2 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார் மற்றும் தரவரிசையில் 21வது இடத்தில் உள்ளார். கோலி தனது இயல்பான ஆட்டத்தை விளையாடுவதற்கும், அனைத்து வடிவங்களிலும் பெரிய ஸ்கோரை உருவாக்குவதற்கும் சிரமப்பட்டு வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக டி20 போட்டிகளில் ஒரு ஆண்டில் 300 ரன்களை கூட கோலி கடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், சர்வதேச டி20 பேட்டிங் தரவரிசையில் 6ஆவது இடத்தில் இருந்த இஷான் கிஷான், ஒரு இடத்தைப் பின்தள்ளி ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக தொடரில் இஷான் சிறப்பாக விளையாடிய போதிலும் அயர்லாந்திற்கு எதிரான சமீபத்தில் முடிவடைந்த 2ஆபோட்டி டி20 தொடரில் பெரிய அளவிற்கு சோபிக்க இயலாததால் இந்த பின்னடைவு தரவரிசையில் ஏற்பட்டுள்ளது. 

அதேபோல் ஆடவருக்கான டி20 தரவரிசையில் கேஎல் ராகுல் 17ஆவது இடத்திலும், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 19ஆவது இடத்திலும் உள்ளனர். அதே நேரத்தில் தீபக் ஹூடா 414 இடங்கள் முன்னேறி ஒட்டுமொத்தமாக 104ஆவது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News