West Indies Tour Of Bangladesh 2025: வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் அக்டோபர் 2ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. 

Advertisement

இந்நிலையில் இத்தொடருக்கு பிறகு வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இத்தொடரின் அனைத்து ஒருநாள் போட்டிகளும் மிர்பூரில் நடைபெறும், அதே நேரத்தில் டி20 தொடர் சிட்டகாங்கில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதில் ஒருநாள் தொடரின் முதல் போட்டி அக்டோபர் 18 ஆம் தேதி தொடங்குகிறது, மீதமுள்ள 50 ஓவர் போட்டிகள் அக்டோபர் 20 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன. அதனைத் தொடர்ந்து அக்டோபர் 26ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதில் முதல் போட்டி 26ஆம் தேதியும், மீதமுள்ள இரண்டு போட்டிகள் அக்டோபர் 28 மற்றும் 31 ஆகிய தேதிகளிலும் நடைபெறவுள்ளன்.

அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ள ஐ.சி.சி ஆண்கள் டி20 உலகக் கோப்பைக்கு இரு அணிகளும் தயாராகி வருவதால், இந்த வரவிருக்கும் டி20 சர்வதேச தொடர் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாக இருக்கும். இரு அணிகளும் கடைசியாக கடந்த டிசம்பர் 2024 மோதின. இதில் வங்கதேச அணி 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது. 

தற்சமயம் வெஸ்ட் இண்டீஸ் அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் நேபாளத்திற்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரில் விளையாடி வருகிறது. அதேசமயம் வங்கதேச அணியானது ஆசிய கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் இருந்து வெளியேறிய பிறகு, அடுத்ததாக எதிர்வரும் அக்டோபர் 2ஆம் தேதி முதல் ஆஃப்கானிச்தான் அணியுடன் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. 

Also Read: LIVE Cricket Score

வங்கதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அட்டவணை

  • முதல் ஒருநாள் போட்டி - அக்டோபர் 18, மிர்பூர்
  • இரண்டாவது ஒருநாள் போட்டி - அக்டோபர் 20, மிர்பூர்
  • மூன்றாவது ஒருநாள் போட்டி - அக்டோபர் 23, மிர்பூர்
  • முதல் டி20ஐ - 26 அக்டோபர், சிட்டகாங்
  • 2வது டி20ஐ - 28 அக்டோபர், சிட்டகாங்
  • 3வது டி20ஐ - அக்டோபர் 31, சிட்டகாங்
Advertisement

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News