BAN vs NZ, 1st T20: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Mon, Aug 30 2021 21:04 IST
Bangladesh vs New Zealand, 1st T20I – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)

டி20 உலகக்கோப்பை தொடர் நெருங்கும் சூழலில் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் நியூசிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.

இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நாளை மறுநாள் (செப்.1) தாக்காவில் நடபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

போட்டி தகவல்கள் 

  • மோதும் அணிகள் - வங்கதேசம் - நியூசிலாந்து
  • இடம் - ஷேர் பங்களா மைதானம், தாக்கா
  • நேரம் - மாலை 5.30 மணி 

போட்டி முன்னோட்டம்

மஹ்மதுல்லா தலைமையிலான வங்கதேச அணி, சமீபத்தில் ஆஸ்திரேலியாவுடனான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனைப் படைத்தது. இதனால் புது உத்வேகத்துடன் அந்த அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.

மேலும் ஆஸ்திரேலிய தொடரில் இடம்பெறாமல் இருந்த லிட்டன் தாஸ், முஸ்பிக்கூர் ரஹீம் ஆகியோர் இத்தொடரில் இடம்பிடித்திருப்பது, அணிக்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.

மேலும் பந்துவீச்சில் மெஹதி ஹசன், ருபெல் ஹூசைன், முஸ்தபிசூர் ரஹ்மான், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருவது அணியின் பலத்தை கூட்டுக்கிறது. 

நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை கேன் வில்லியம்சன், ட்ரெண்ட் போல்ட், மார்டின் கப்தில் ஆகியோர் இல்லாத, டாம் லேதம் தலைமையிலான இரண்டாம் அணி வங்கதேச அணிக்கெதிராக விளையாடவுள்ளது. 

இருப்பினும் ஹென்றி நிக்கோலஸ், காலின் டி கிராண்ட்ஹோம், வில் யங் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறன் பெற்றவர்கள் என்பதால், அது நிச்சயம் வங்கதேச அணிக்கு சற்று தலைவலியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் இதுநாள் வரை வங்கதேச அணி நியூசிலாந்தை டி20 கிரிக்கெட்டில் தோற்கடித்தது இல்லை என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் பண்மடங்கு அதிகரித்துள்ளது.

நேருக்கு நேர்

  • மொத்த போட்டிகள் - 10
  • நியூசிலாந்து வெற்றி - 10
  • வங்கதேசம் - 0

உத்தேச அணி
வங்கதேசம் -
முகமது நைம்/ லிட்டன் தாஸ், சௌமியா சர்க்கார், ஷகிப் அல் ஹசன், மஹ்மதுல்லா (கே), முஷ்பிக்கூர் ரஹீம், அஃபிஃப் ஹொசைன், மொசடெக் ஹொசைன், மஹதி ஹசன், முகமது சைபுதீன், ரூபல் ஹுசைன், முஸ்தாபிசூர் ரஹ்மான்.

நியூசிலாந்து - ஹென்றி நிக்கோலஸ், டாம் லாதம், வில் யங், காலின் டி கிராண்ட்ஹோம், ராச்சின் ரவீந்திரா, கோல் மெக்கோன்சி, டாம் ப்ளண்டெல், அஜாஸ் பட்டேல், மேட் ஹென்றி, ஸ்காட் குகலீன், டக் பிரேஸ்வெல்.

Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - முஷ்பிக்கூர் ரஹீம்
  • பேட்ஸ்மேன்கள் - மஹ்மதுல்லா, காலின் டி கிராண்ட்ஹோம், வில் யங், ஹென்றி நிக்கோலஸ்
  • ஆல் -ரவுண்டர்கள் - சௌமியா சர்கார், மெஹதி ஹசன், ஷகிப் அல் ஹசன்
  • பந்துவீச்சாளர்கள் - முஸ்தபிசூர் ரஹ்மான், அஜாஸ் பட்டேல், மேட் ஹென்றி.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை