தென் ஆப்பிரிக்க அணி அடுத்த மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 14ஆம் தேதி கொல்கத்தாவிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 22ஆம் தேதி கௌகாத்தியிலும் நடைபெற இருக்கிறது. 

Advertisement

அதனைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் 30ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 06ஆம் தேதி வரையிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது டிசம்பர் 09ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 19ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் 15 பேர் அடங்கிய தென் ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. 

Advertisement

அதன்படி, இத்தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக டெம்பா பவுமா நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக காயம் காரணமாக பாகிஸ்தன் டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய நிலையில், தற்சமயம் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பியதுடன் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த அணியில் டெவால்ட் பிரீவிஸ், காகிசோ ரபாடா, மார்கோ ஜான்சென், ஸ்டிரிஸ்டன் ஸ்டப்ஸ் உள்ளிட்டோரும் இடம் பிடித்துள்ளனர்.

மேலும் இந்த அணியில் கேசவ் மஹாராஜ், சேனுரன் முத்துசாமி மற்றும் சிமோன் ஹர்மர் ஆகியோருக்கு இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தென் ஆப்பிரிக்க அணி பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்திருக்கும் நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எவ்வாறு செயல்படும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Also Read: LIVE Cricket Score

தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணி: டெம்பா பாவுமா (கேப்டன்), கார்பின் போஷ், டெவால்ட் பிரீவிஸ், டோனி டி ஸோர்ஸி, ஜுபைர் ஹம்சா, சைமன் ஹார்மர், மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், ஐடன் மார்க்ரம், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெர்ரைன்.

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News