பிபிஎல் 2023: ஃபிஞ்சின் அதிரடியில் ரெனிகேட்ஸ் அசத்தல் வெற்றி!

Updated: Tue, Jan 24 2023 22:19 IST
BBL 12: Melbourne Renegades are through to the playoffs of BBL12 with a comfortable win against Adel (Image Source: Google)

பிக் பேஷ் லீக்கின் 12ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் - அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய ஸ்டிரைக்கர்ஸ் அணியில் மேத்யூ ஷார்ட் ரன்கள் ஏதுமின்றியும், டிராவிஸ் ஹெட் 19 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த அலெக்ஸ் கேரி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கேரி அரைசதமடித்த கையோடு 65 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

அதன்பின் களமிறங்கிய ஆடம் ஹோஸ், காலின் டி கிராண்ட்ஹோம், ரியான் கிப்சன் என அனைவரும் சொற்ப ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்களைச் சேர்த்தது. ரெனிகேட்ஸ் தரப்பில் ஃபவத் அஹ்மத் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியில் மார்ட்டின் கப்தில் 8, ஷான் மார்ஷ் 0, சாம் ஹார்ப்பர் ஒரு ரன்னில் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஆரோன் ஃபிஞ்ச் - மேத்யூ இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இதில் அதிரடியாக விளையாடிய ஃபிஞ்ச் அரைசதம் கடந்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 63 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 18.2 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணியை வீழ்த்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை