பிக் பேஷ் லீக் தொடரின் 13ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 28ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய மெல்போர்ன் அணிக்கு தாமஸ் ரோஜர்ஸ் - டேனியல் லாரன்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். அதிரடியாக தொடங்கிய இவர்களில் தாமஸ் ரோஜர்ஸ் 19 ரன்களிலும், டேனியல் லாரன்ஸ் ஒரு பவுண்டரி, 2 சிக்சர்கள் என 36 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வெப்ஸ்டரும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். 

Advertisement

பின்னர் இணைந்த கேப்டன் மேக்ஸ்வெல் - ஸ்டொய்னிஸ் இணை அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. இதில் 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 31 ரன்களில் கிளென் மேக்ஸ்வெல் ஆட்டமிழந்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்டொய்னிஸ் 34 ரன்களையும், கார்ட்ரைட் 29 ரன்களையும் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களைச் சேர்த்துள்ளது. சிட்னி சிக்சர்ஸ் அணி தரப்பில் டாட் மர்ஃபி 2 விக்கெட்டுகளையும், டாம் கரன் மற்றும் பென் துவார்ஷூயிஸ் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய சிட்னி அணிக்கு ஜோஷ் பிலீப் - ஜேம்ஸ் வின்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜோஷ் பிலீப் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த வின்ஸ் - டேனியல் ஹூக்ஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேம்ஸ் வின்ஸ் அரைசதம் அடித்தார். 

அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டேனியல் ஹூக்ஸ் 41 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 79 ரன்களை எடுத்திருந்த ஜேம்ஸ் வின்ஸும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஹென்றிக்ஸ் - ஜோர்டன் சில்க் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். 

Advertisement

இதன்மூலம் சிட்னி சிக்சர்ஸ் அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஜேம்ஸ் வின்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News