ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த பிக் பேஷ் லீக் தொடரின் 13ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை ஏட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற குவாலிஃபையர் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. குயீன்ஸ்லாந்தில் நடைபெற்ற இப்போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய சிட்னி சிக்சர்ஸ் அணியில் ஜேக் எட்வர்ஸ் 16 ரன்களிலும், ஜோஷ் பிலீப் 5 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த டேனிய ஹூக்ஸ் - கேப்டன் ஹென்றிக்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் 3ஆவது விக்கெட்டிற்கு 90 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 

Advertisement

பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டேனியல் ஹூக்ஸ் 42 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்த ஹென்றிக்ஸும் 59 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்ப, 20 ஓவர்கள் முடிவில் சிட்னி சிக்சர்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களைச் சேர்த்தது. 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு ஜோஷ் பிரௌன் - ஜிம்மி பெர்சன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிரௌன் 15 ரன்களிலும், பெர்சன் 26 ரன்களிலும் என ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் மெக்ஸ்வீனி 11 ரன்களுக்கும், மேத்யூ ரென்ஷா 16 ரன்களுக்கும், மேக்ஸ் பிரையண்ட் 12 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். 

இதனையடுத்து களமிறங்கிய பால் வால்டர், மைக்கேல் நேசர், ஸேவியர் பார்ட்லெட், ஸ்பென்ஸர் ஜான்சன், மேத்யூ குன்னமேன் ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் 17.5 ஓவர்களில் பிரிஸ்பேன் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்களுக்கு ஆல அவுட்டானது. சிட்னி சிக்சர்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய பென் துவார்ஸூயிஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதன்மூலம் சிட்னி சிக்சர்ஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் சிட்னி சிக்சர்ஸ் அணி நடப்பாண்டு பிக் பேஷ் லீக் தொடரின் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக முன்னேறி அசத்தியுள்ளது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த துவார்ஸூயிஸ் ஆட்டநாயனகாகத் தேர்வுசெய்யப்பட்டார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News