பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 37ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் - பிர்ஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ரெனிகேட்ஸ் அணி முதலில் பந்துவீசியது.
Advertisement
அதன்படி களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு ஜேக் லேமேன் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அரைசதமும் அடித்து அசத்தினார்.
Advertisement
இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஹீட் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களைச் சேர்த்தது. இதில் ஜேக் லேமேன் 65 ரன்களைச் சேர்த்தார்.
இதையடுத்து இலக்கை துரத்திய ரெனிகேட்ஸ் அணி ஆரோன் ஃபிஞ்ச், ஷான் மார்ஷ் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தினால் இலக்கை 15 ஓவர்களிலேயே எட்டியது.
இதன்மூலம் மெல்ர்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.