நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; ரோஹித் கேப்டன், ராகுல் துணை கேப்டன்!

Updated: Tue, Nov 09 2021 20:47 IST
Image Source: Google

டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. நவம்பர் 17ஆம் தேதி தொடங்கவுள்ள இந்த தொடர் நவம்பர் 21ஆம் தேதி நிறைவடைகிறது.

இந்நிலையில் இத்தொடருகான 16 வீரர்கள் அடங்கிய இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகியதையடுத்து, புதிய கேப்டனாக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் துணை கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் இத்தொடருக்கான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர், ஆவேஷ் கான், ஹர்ஷல் படேல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் சீனிய வீரர்களான விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி ஆகியோருக்கு இத்தொடரிலிருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

Also Read: T20 World Cup 2021

இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், இஷான் கிஷன், வெங்கடேஷ் ஐயர், யுஸ்வேந்திர சஹால், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், ஆவேஷ் கான், புவனேஷ்வர் குமார், தீபக் சஹார், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை