மகளிர் ஐபிஎல் 2023: ஐந்து அணிகளைத் தட்டித்தூக்கிய நிறுவனங்கள்; ஏலம் எடுக்கப்பட்ட தொகை குறித்த தகவல்!
ஆண்டுதோறும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் இந்தியன் பிரீமியர் லீன் எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் தொடரை பிசிசிஐ அறிமுகம் செய்தது. இதுவரை ஆண்களுக்கு மட்டுமே நடத்தப்பட்டு வந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் இந்த ஆண்டு முதல் முறையாக மகளிருக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. வரும் மார்ச் 17 ஆம் தேதி மகளிருக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட இருக்கிறது.
இதில், பங்கேற்கும் வீராங்கனைகளுக்கான ஏலம் வரும் பிப்ரவரி மாதம் நடக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தொடரில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்கின்றன. அந்த அணிகளை ஏலம் எடுக்கும் நிகழ்ச்சி இன்று பிற்பகல் 2 மணிக்கு மும்பையில் நடைபெற்றது. மும்பையில் நடந்த இந்த ஏலத்தில் மொத்தமாக 7 ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் உள்பட அதானி குரூப், கேப்ரி குளோபல், அப்போலோ பைப்ஸ், அமித் லீலா எண்டர்பிரைசஸ், ஸ்ரீராம் குரூப், ஹல்டிராம்ஸ் குரூ, டோரண்ட் பார்மா, ஸ்லிங்ஷாட் 369 வென்சர்ஸ் பிரைவேட் லிமிட்டே நிறுவனம் உள்பட மொத்தமாக 17 நிறுவனங்கள் கலந்து கொண்டன.
இந்நிலையொல் மகளிர் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 5 அணிகளை வாங்கிய நிறுவனங்களை பிசிசிஐ அறிவித்தது. அதன்படி இந்த ஏலம் 4,669.99 கோடிக்கு நடைபெற்றுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் அகமதாபாத் அணியை அதானி ஸ்போர்ட்ஸ்லைன் பிரைவேட் லிமிடெட் ரூ.1,289 கோடிக்கும், மும்பை அணியை இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடேட்(Indiawin Sports) அணி 912.99 கோடிக்கும் வாங்கியுள்ளது.
அதனையடுத்து பெங்களூரு அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடேட் ரூ.901 கோடிக்கும், டெல்லி அணியை ஜேஎஸ்டபிள்யூ ஜிஎம்ஆர் கிரிக்கெட் நிறுவனம் ரூ.810 கோடிகளுக்கும், லக்னோ அணியை கேப்ரி குளோபல் நிறுவரும் ரூ.757 கோடி ரூபாய்க்கும் வாங்கியுள்ளனர்.
அதேசமயம் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகளின் உரிமையாளர்கள் டெண்டர் ஆவணத்தை வாங்கினாலும் ஐபிஎல் ஏலத்தில் நுழையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக மகளிருக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான உரிமத்தை வையாகாம்-18 நிறுவனம் ரூ.951 கோடிக்கு கைப்பற்றியுள்ளது. ஒவ்வொரு போட்டிக்கும் ரூ.7.09 கோடி என்று ஒட்டுமொத்தமாக 2023 முதல் 2027 ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு ரூ.951 கோடி என்று ஏலம் எடுத்துள்ளது.
இந்த மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் அகமதாபாத் (நரேந்திர மோடி மைதானம்), கொல்கத்தா (ஈடன் கார்டன் மைதானம்), சென்னை (எம் ஏ சின்னச்சாமி மைதானம்), பெங்களூரு (எம் சின்னச்சாமி மைதானம்), டெல்லி (அருண் ஜெட்லி மைதானம்), கவுகாத்தி (பர்ஸ்சபரா மைதானம்), இந்தூர் (ஹோல்கர் மைதானம்), லக்னோ (ஏபி வாஜ்பாய் எகானா கிரிக்கெட் மைதானம்) மற்றும் மும்பை (வாங்கடே/ப்ரபோர்ன் மைதானம்) ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.